பாரதியின் காளி

பாரதியின் வழிபாட்டு உருமாற்றத்தைத் துல்லியமாகப் படம் பிடித்து விளக்குகிறார் நூலாசிரியர்.
பாரதியின் காளி
SWAMINATHAN
Published on
Updated on
1 min read

பாரதியின் காளி-ஸ்ரீரங்கம் மோகனரங்கன்; பக்.136; ரூ.160; சந்தியா பதிப்பகம், சென்னை-83, ✆ 044-2489 6979.

பாரதியார் முதல்முதலில் காசியில் வங்காளிகள் வழிபட்ட காளியின் உருவத்தையும், எருமை கிடாக்கள் பலியிடப்பட்டதையும் உடல் நடுங்கிக் கண்டார். ஆனால், அதன் பிறகுதான் 'ஆடுங் காளி, சாமுண்டி, கங்காளி....', 'யாதுமாகி நின்றாய் காளி' என்றெல்லாம் எழுதுகிறார். இந்த மாற்றம் பாரதியிடம் எப்படி நிகழ்ந்தது என்பதை இந்நூல் விவரிக்கிறது.

பரமஹம்சர், விவேகானந்தர், நிவேதிதா ஆகியோரின் வழியாக பாரதியின் சாக்த வழிபாடு தொடங்கி நவசக்தி மார்க்கமாக உருவெடுத்தது. பாரதியின் இந்த வழிபாட்டு உருமாற்றத்தைத் துல்லியமாகப் படம் பிடித்து விளக்குகிறார் நூலாசிரியர்.

விவேகானந்தரின் சொற்களைப் பின்பற்றி, காளியின் உருவில் இந்தியாவையும், இந்தியாவின் உருவில் காளியையும் வங்காளம் கண்டுகொண்டு சுதேசிய எழுச்சிக்கு வித்திட்டது. விவேகானந்தரின் இத்தகைய சொற்களே பாரதியின் காளி தரிசனத்துக்கு திறவுகோலாயிற்று. இதன் நீட்சியாகத்தான் "முப்பது கோடி முகமுடையாள்...' என்று பாரத தேவியை பராசக்தியின் அவதாரமாக பாரதி கண்டு கொண்டார் என்று இந்நூல் நிறுவுகிறது.

சக்தி வழிபாட்டை பரமஹம்சர், விவேகானந்தர், நிவேதிதா ஆகியோர் காட்டிய வழியில் மட்டுமல்லாது, மதம், சடங்கு, வழிபாடு ஆகியவற்றில் உட்குடைந்து பொருள்கள் பல கண்டார் பாரதியார் என இந்நூல் விவிரிக்கிறது.

பாரதியின் கருத்தும், காளி என்ற தத்துவமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை என்று இந்நூல் துல்லியமாக விளக்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com