சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1) - தொகுப்பாசிரியர் சண் தவராஜா; பக்.168; ரூ.200; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி- 620 003, ✆ 94432 84823.
இலங்கைப் போரின்போது வாழ்வுக்காகப் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றோர் லட்சத்துக்கும் மேற்பட்டோர். அந்தந்த நாடுகளின் சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டு சாதித்து வருகின்றனர்.
அந்த வகையில், சுவிஸ் நாட்டுக்குச் சென்று தற்போதும் இலக்கியத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிவரும் ஏ.ஜி.யோகராஜா, செ.சிறிகந்தராஜா (கங்கை மகன்), ஆதிலட்சுமி சிவகுமார், விக்கி நவரட்ணம், அருள்ராசா நாகேஸ்வரன் (கல்லாறு சதீஷ்), இராமநாதன் உதயகுமார் (குடத்தனை உதயன்), உ.கலைச்செல்வி (லதா உதயன்), க.அருந்தவராஜா, ப.ஜெயக்கொடி (பொலிகை ஜெயா), மதிவதனி (வாணமதி), கமலினி கதிர், சண் தவராஜா (பூமிபுத்திரன்) ஆகியோரின் எழுத்துப் பணி, ஆக்கங்கள் பற்றிய குறிப்புகள் என வரலாற்றுப் பெட்டமாக இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது.
வாழும் காலத்திலேயே பிரபலங்களின் வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும். பல்வேறு துறைகளில் பலரும் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும், காலத்தின் வாழ்வியலையும், கலாசார விழுமியங்களையும் பதிவு செய்வது எழுத்தாளர்கள்தான்! அந்த எழுத்தாளர்களைப் பற்றிய நூல் என்றால் கேட்கவா வேண்டும்?. சிறப்பான பல நூல்களின் அறிமுகமும் கிடைக்கிறது. அந்த நூல்களை வாசிக்க வேண்டியதன் ஈர்ப்பும் மேலோங்குகிறது.
இந்த நூலின் ஊடே இலங்கைப் போர், தமிழர்களின் அன்றைய - இன்றைய நிலைகள் குறித்த ஒரு பார்வையையும் அறியலாம்.
இந்த எழுத்தாளர்கள் எழுத்துலகில் இருந்தாலும், பல துறைகளிலும் சிறந்து விளங்கிவருவதையும் அறிய முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.