உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்-மொழிபெயர்ப்பு-ஆ.திருநாகலிங்கம்; பக்.128; ரூ.150; சகசானந்தா பதிப்பகம், புதுச்சேரி 605 004, ✆ 94869 07860.
நாட்டுப்புறவியல் என்பது கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக கல்விப் புலம் சார்ந்து இயங்கி வருகிறது. இந்த நூலில் நாட்டுப்புறத்தார் என்பவர் யார்?, நாட்டுப்புறவியல் பங்களிப்பாளர்களின் வரையறைகள், நாட்டுப்புறவியல் வகையும்-வகைப்பாடும் ஆகிய தலைப்புகளில் மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
நாட்டுப்புறத்தார் என்பவர் யார் என்ற கட்டுரையை ஆலன் டண்டில் எழுதியுள்ளார். இதில், நாட்டுப்புறவியல் என்பது 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய ஒன்றாகும். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கவிஞரும் தத்துவவாதியுமான சோகன் காட்பிரைப் வான்கெர்டர், ஜெர்மன் மொழியில் ஒரு நாட்டுப்புறப் பாடல் தொகுப்பை வெளியிட்டுள்ளதைத் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டுரை, மரியா லீச் தொகுத்த நாட்டுப்புறவியல் - பங்களிப்பாளர்களின் வரையறைகள். இதில் சுமார் 21 மேல்நாட்டு அறிஞர்களின் நாட்டுப்புறவியல் சார்ந்த, அவர்களின் கருத்துகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறவியல் அறிஞர்களின் தொகுப்பானது சிறந்த ஆய்வுக் கோவை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது.
அடுத்த கட்டுரை, நாட்டுப்புறவியல் வகையும் வகைப்பாடும். இந்தக் கட்டுரையை ஆர்.எஸ்.போக்ஸ் எழுதியுள்ளார். இதில் நாட்டுப்புற வகைகள் எனத் தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதன்மை வகை என்று பொது நாட்டுப்புறவியல், உரைநடைக் கதைகள், கதைப்பாடல், பாடல், நடனம், இசை, வசனம், நாடகம், பழக்க வழக்கங்களும் விழாக்களும், நிலவியல், மொழி, கைவினை, கட்டடக் கலைகள், உணவு, பானங்கள், நம்பிக்கைகள், பேச்சுகள், பழமொழிகள், விடுகதைகள் ஆகியவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முதன்மை வகைகளைக் கொண்டு, வகையும் பிரிவுகளும் மற்றும் உட்பிரிகளும் கூறப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.