திருப்புமுனை (இந்திய வரலாற்றை மாற்றிய இருபது நிகழ்வுகள்)

இந்திய அளவிலான அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய தளங்களை மையப்படுத்தி நிகழ்ந்த இருபது மிக முக்கிய நிகழ்வுகளை பருந்துப் பார்வையில் இந்நூல் பதிவு செய்துள்ளது.
திருப்புமுனை (இந்திய வரலாற்றை மாற்றிய இருபது நிகழ்வுகள்)
SWAMINATHAN
Published on
Updated on
1 min read

திருப்புமுனை (இந்திய வரலாற்றை மாற்றிய இருபது நிகழ்வுகள்) - எஸ்.நடராஜன்; பக்.94; ரூ.120; எழுத்து பிரசுரம், சென்னை-600 050, ✆ 89250 61999.

இந்திய அளவிலான அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய தளங்களை மையப்படுத்தி நிகழ்ந்த இருபது மிக முக்கிய நிகழ்வுகளை பருந்துப் பார்வையில் இந்நூல் பதிவு செய்துள்ளது.

மக்களின் பெருவாரியான எழுச்சி, நீதிமன்றத் தீர்ப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி, தேர்தல் கூட்டணி - முடிவுகள், அரசியல் தலைமை மாற்றங்கள், தலைவர்களுக்கு இடையேயான மோதல்கள், நாட்டின் போக்கை மாற்றியமைக்கும் விதமாக எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகள் என ஒவ்வொரு அத்தியாயமும் கடந்த காலத்தின் மீது நுண்ணிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

சுருக்கமாக எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு அத்தியாயம் குறித்தும் விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கு ஏதுவாக நூல்கள், வலைதளங்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

நம்மில் பெரும்பாலோர் குறிப்பாக இளைய தலைமுறையினர், நாட்டில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை அறிந்துகொள்ள விருப்பமுடைய எவருக்கும் இந்நூல் ஒரு கையேடாக அமைகிறது.

மாபெரும் இந்திய அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு அதை எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்விக்கு பதில் தரும் விதமான நிகழ்வுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சுருக்கமாக எழுதப்பட்டுள்ள இந்நூலை அடிப்படையாகக் கொண்டு விரிவாகத் தெரிந்துகொள்ள முனையும் எவரொருவருக்கும் இந்திய அரசியல் குறித்த புரிதல் ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com