நம்பிக்கை நமதே!

பிரச்னைகளோடு வாழ்பவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை சிந்திக்க வைக்கும் நூல் இது.
நம்பிக்கை நமதே!
SWAMINATHAN
Published on
Updated on
1 min read

நம்பிக்கை நமதே!- முனைவர் சுந்தர ஆவுடையப்பன்; பக்.200; ரூ.200; குமரன் பதிப்பகம், சென்னை-600 017; ✆ 044- 2435 3742.

கூட்டுக் குடும்ப முறை சிதைந்து, தனிக் குடித்தனம் பெருகிவிட்டதாலும், இயந்திரமயமான நவீன உலகில் இணையத்தில் சிக்கித் தவிக்கும் இளைய தலைமுறையினர் நம்பிக்கையில்லாமல் வாழ்கின்றனர். இதனால், மன இறுக்கம் அதிகமாகி, குடும்ப வாழ்க்கை முறைகளும் சிதைந்து வருகின்றன. வாசிப்புப் பழக்கமும் சிதைந்துவிட்ட நிலையில், தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் நல்லதொரு நூலை எழுதியிருக்கிறார் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற நூலாசிரியர்.

நட்பு, வாழ்க்கை வாழ்வது எப்படி, உடனிருப்போருடன் நன்றியோடு இருக்க வேண்டும், யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது, தனக்கென வாழ்தல், வீடுகளில் மழலைகளால் மகிழ்ச்சி, துன்பமே துணை, குடும்பம், அலுவலகம், கடின உழைப்பு, கனிவான ஓய்வு, மறத்தலும் மன்னித்தலும், அறிவுரை, நிம்மதி, வாழ்தல், இல்லறம், திருட்டு, பொது அறிவு போன்றவை குறித்து 30 தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இளமைக்காலம் முதல் இறுதிக்காலம் வரை மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும், பிறரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், மகிழ்ச்சியாக நாள்களைக் கடத்துதல், சுற்றமும் நட்பையும் பேணுதல் என்பன குறித்தெல்லாம் நல்லதொரு அறிவுறுத்தல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் இந்த நூலைப் படிக்கத் தொடங்கினால், வாசித்து முடித்தே வைக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.

பிரச்னைகளோடு வாழ்பவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை சிந்திக்க வைக்கும் நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com