யோகா! ஆஹா! யோகா பயிற்சிகள்

ஒவ்வொரு யோகா செய்யும்போதும் கிடைக்கும் பலன் குறித்த விளக்கமும் தரப்பட்டுள்ளது.
யோகா! ஆஹா! யோகா பயிற்சிகள்
SWAMINATHAN
Published on
Updated on
1 min read

யோகா! ஆஹா! யோகா பயிற்சிகள்- ரா.தங்கலக்ஷ்மி; பக்:168; ரூ.220; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127, ✆ 81480 66645.

யோகா இன்று சர்வதேச கலையாகிவிட்டது. இதனால்தான் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எந்த அளவுக்கு யோகா பிரபலமடைந்துள்ளதோ அந்த அளவுக்கு யோகா செய்வதில் ஒழுங்கும், நேர்த்தியும் உள்ளதா என்றால் கேள்விக்குறிதான்.

எந்த ஒரு கலையும் நன்கு கற்றாய்ந்த, பட்டறிவுள்ள, பண்பட்ட ஒருவரால் கற்றுத்தரப்படும்போது தான் அதை முழுமையாக உள்வாங்கி கற்போரால் பயன்பெற முடியும். அதை உணர்ந்து இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட யோகா குறித்த விளக்கமும், சூரிய நமஸ்காரம்முதல் நாடி சுத்தி வரை அனைத்தும் பட விளக்கங்களுடனும், செய்முறை விளக்கங்களுடனும் தொகுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு யோகா செய்யும்போதும் கிடைக்கும் பலன் குறித்த விளக்கமும் தரப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆசனத்தின்போதும் எவ்வாறு சுவாசிக்க வேண்டும், யார் யாரெல்லாம் எந்தெந்த ஆசனங்களை செய்யலாம், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன. யோகாசனங்களை செய்யும் முன்பாக செய்ய வேண்டிய உடல் தளர்வுப் பயிற்சிகள் குறித்து விளக்கமாக தரப்பட்டுள்ளது.

என்னதான் நூலைப் படித்தாலும் ஆன்மிக உள்ளத்தோடும், ஆரோக்கியமான உடலோடும் திகழ, அனைவரும் யோகா செய்யலாம் என்றாலும், அதைப் பயிற்சி பெற்ற ஆசிரியர் மூலம் கற்பது சிறப்பு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com