மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்-வரலாறும் வழிபாடும்

குளம் 19,800 சதுர அடி பரப்பில் பிரகாரங்களுடன் இருப்பது குறித்தும், அதன் பெருமை குறித்தும் இடம்பெற்றுள்ள தகவல்கள் படிக்கத் தூண்டுவதாக உள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்-வரலாறும் வழிபாடும்
SWAMINATHAN
Published on
Updated on
1 min read

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்-வரலாறும் வழிபாடும்-ப.சரவணன்; பக். 148; ரூ.190; சுவாசம் பதிப்பகம், சென்னை- 600 127, ✆ 81480 66645.

மதுரைக்கு இதயமாக திகழக்கூடிய கோயில்; தமிழகத்திலுள்ள 366 மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில்களுக்கும் முதன்மையான கோயில்; 33,000 சிற்பங்களைக் கொண்ட கோயில் என பல்வேறு பெருமைகளைக் கொண்டது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில். பூஜை முறைகள், கோயில் மேலாண்மை, கோயிலுக்குச் சென்று வழிபடும் மரபார்ந்த முறைகள் போன்றவை நூலில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

கோயில் கோபுரங்கள், நுழையும் வழிகள், மண்டபங்கள் குறித்த குறிப்புகள் புதிய தகவல்களைத் தருகின்றன. 15.37 ஏக்கர் பரப்பிலுள்ள மதுரை மீனாட்சி கோயிலுக்குள் உள்ள குளங்களில் முதன்மை தீர்த்தமான பொற்றாமரைக்

குளம் 19,800 சதுர அடி பரப்பில் பிரகாரங்களுடன் இருப்பது குறித்தும், அதன் பெருமை குறித்தும் இடம்பெற்றுள்ள தகவல்கள் படிக்கத் தூண்டுவதாக உள்ளது.

முஸ்லிம் படையெடுப்புகளின் போது, கோயிலின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அவர்களிடமிருந்து பாதுகாக்க மூடப்பட்ட கோயிலை மீண்டும் திறக்க அரை நூற்றாண்டு ஆகியது. அப்போது சிதைந்த கோயிலை விசுவநாத நாயக்கர் மறுகட்டுமானம் செய்தார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் கோயில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.

சித்திரைத் திருவிழா, வைகாசி வசந்தத் திருவிழா, ஆவணி மூலப் பெருவிழா எனப்படும் பிட்டுத் திருவிழா, மாசி மக திருவிழா, பங்குனி வசந்த விழாவின் சிறப்புகள், வரலாறு போன்றவை வாசிப்போருக்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com