பாரதிய நீதிச் சட்டம் 2023-வடகரை செல்வராஜ்; பக்.832; ரூ.1,100; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 024, ✆ 97545 16298.
இந்திய தண்டனைச் சட்டம்,1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1973, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகிய பழைமையான முப்பெரும் குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக முறையே பாரதிய நீதிச் சட்டம் 2023, பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் -2023 மற்றும் பாரதிய சாட்சியச் சட்டம், 2023 ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களை 2023-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்திய தண்டனைச் சட்டத்துக்கு மாற்றான பாரதிய நீதிச் சட்டம் என்ற பெயரில் தலைப்பிட்டு படைக்கப்பட்டுள்ள இந்த நூலில், இந்தச் சட்டத்தில் உள்ள 358 பிரிவுகளையும், அனைவரும் எளிதில் படித்தும் புரிந்துகொள்ளும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பகுதி 1, பகுதி-2 என வகைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
இருபது அத்தியாயங்கள்மூலம் தண்டனைச் சட்டத்தின் விரிவான பிரிவு வாரியான விளக்கங்கள், தண்டனைகள், தண்டனைக்கால பகுதிகள், அபராதம், குழந்தைகள் செய்யும் குற்றச்செயல், மனநலன் பாதித்தவர்கள் செய்யும் குற்றச்செயல்கள், பெண்களுக்கு எதிரான குற்றவியல் வன்முறை மற்றும் தாக்குதல், அதற்கான தண்டனை என பரந்துபட்ட சட்ட நுணுக்கங்கள் அனைத்தும் விரிவாக இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டங்கள் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இவற்றின் பின்னணி குறித்து தெரிந்துகொள்வது அவசியம். அதற்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.