தெய்வத்தமிழ் - பன்னாட்டு ஆய்வு மாநாட்டுக் கட்டுரைகள்

பக்தி இலக்கியங்கள் இந்த மண்ணில் என்ன நிகழ்த்தின என்பதைத் தெரிந்து கொள்ளவும் முக்கியமான ஆய்வுக் கோவை இது.
தெய்வத்தமிழ் - பன்னாட்டு ஆய்வு மாநாட்டுக் கட்டுரைகள்
SWAMINATHAN
Updated on
1 min read

தெய்வத்தமிழ் - பன்னாட்டு ஆய்வு மாநாட்டுக் கட்டுரைகள்-தொகுப்பு-முனைவர் கலை. இராம.வெங்கடேசன், முனைவர் ஜெ.இராதாகிருஷ்ணன்; தொகுதி 1- பக்.648; ரூ.600; தொகுதி 2-பக்.648; ரூ.600; சங்கரா பதிப்பகம், ஏனாத்தூர், காஞ்சிபுரம்-631 561, ✆ 044-2726 4066.

காஞ்சி சங்கரா கல்லூரியில் தெய்வத்தமிழ் இருக்கை தொடங்கப் பெற்று, அதன்மூலம் 180 ஆய்வாளர்களின் கட்டுரைகள் அடங்கிய இரு தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் தொகுதியில் 90 ஆய்வுக் கட்டுரைகளும், இரண்டாம் தொகுதியில் 87 ஆய்வுக் கட்டுரைகளும் என 177 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

சித்தர்களின் அறிவியல் பயன்பாட்டுச் சிந்தனைகளில் இடம் பெற்றுள்ள 'தேடருமகண்ட வொளிப்பிழம்பாய் ஞான தீதப்பூரணமாய் தற்செயல் கொண்டெல்ல' என்ற பிரளய வெடிப்பினால் தோன்றிய நெருப்பே உலகத் தோற்றத்துக்குக் காரணம் என்பதை தேரையர் குணவாகடப் பாடல் கூறுகிறது.

பத்தாவது கட்டுரையான காஞ்சிபுரத்துக் கலம்பங்களில் கடவுளர் என்பதில், காஞ்சியம்பதியில் தோன்றிய ஏழு கலம்பகங்கள், அவற்றின் பக்தி நெறி பரப்பு, கலவை பிரபந்தமாகிய கலம்பகத்தை சிறப்பாக கையாண்டு வந்துள்ளமை கூறப்பட்டுள்ளது.

சிவன் தொடர்பான செய்திகள் காணப்பட்ட போதிலும், சிவ வழிபாடு எத்தகையது என்பதை அறிய முடியவில்லை. சிவன் என்ற சொல் சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை. ஆனால், சிவனின் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன என்று

'சங்க இலக்கியங்கள் காட்டும் சைவம்' கட்டுரை கூறியுள்ளது.

மாணிக்கவாசகர் பாடல்களில் அகத்திணை உணர்வுகள் கட்டுரை, இறைவனிடம் கொண்ட அன்பை வெளிப்படுத்த நாயக- நாயகி பாவத்தை சிறந்ததொரு உத்தியாகப் பயன்படுத்தியதை கூறுகிறது. கம்பர் ஏன் ராமாயணத்தை எழுதினார் என்று ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்கு ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட கட்டுரை 'ஏன் எழுதினான்'.

சைவ, வைணவ சமயக் கருத்துகளை மிக நுணுக்கமாக அறிந்துகொள்ளவும், பக்தி இலக்கியங்கள் இந்த மண்ணில் என்ன நிகழ்த்தின என்பதைத் தெரிந்து கொள்ளவும் முக்கியமான ஆய்வுக் கோவை இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com