இராஜேந்திர சோழனின் கங்கையும்-கடாரமும் தரைவழிப்போரும்-கடற்வழிப்போரும்-அறம் கிருஷ்ணன்; பக்.288; ரூ.600; அறம் பதிப்பகம், ஒசூர்-635 126, ✆ 79045 09437.
ராஜராஜசோழன் தமிழரின் கட்டடக் கலைக்குப் பெருமை சேர்த்தார் என்றால், அவரது மகன் ராஜேந்திர சோழன் தமிழரின் போர் கலைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
எட்டுத் திசைகளையும் ராஜேந்திர சோழனால் மட்டும் எப்படி வெல்ல முடிந்தது என்று ஒட்டுமொத்த உலகையே வியப்பில் ஆழ்த்திய வரலாற்று நிகழ்வை சான்றுகளுடன் எடுத்துச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர்.
ராஜேந்திரன் கங்கையை வெல்ல தனது தரைப்படையையும், கடாரத்தை வெல்ல தனது கடற்படையையும் பயன்படுத்தினார். கங்கையை தனது தளபதிகள் மூலமாகவே வென்ற ராஜேந்திரன், கடாரத்தை தானே முன்னின்று நடத்தி போர் செய்திருக்கிறார். அவர் பயன்படுத்திய கடற்படையின் பிரிவுகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
பிகார், ஒடிஸா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், வங்க தேசப் பகுதிகளையும் ராஜேந்திர சோழன் கைப்பற்றி தனது ஆட்சியை விரிவுபடுத்தியதோடு நில்லாமல், மேலும் கடல் வழியாகச் சென்று இன்றைய மலேசிய நாட்டில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கையும் கைப்பற்றியுள்ளார். அதில்தான் மூன்று மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவை அனைத்தும் திருவாலங்காட்டு செப்பேடுகளில் ஆதாரமாகப் பதியப்பட்டுள்ளன.
காவிரியைக் கடக்க யானைகளை வரிசையாக நிற்க வைத்தது; அவை மீது பலகைகளைப் போட்டு பாலம் உருவாக்கியது; காவிரியை தங்கக் குடத்தில் நிரப்பியது; 'சோழ கங்கம்' என்கிற ஏரியை உருவாக்கியது- அதில் வெற்றித் தூணை நிறுவியது; 'கங்கை கொண்ட சோழீஸ்வரர்' என்ற கோயிலைக் கட்டியது என்று தமிழரின் வெற்றிச் செய்திகளின் தொகுப்பாக இந்த நூலைக் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.