தோழி - மாலன்; பக்.268; ரூ.325; எழுத்து பிரசுரம், சென்னை-600 040, ✆ 89250 61999.
வாழ்வில் நாம் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த பல தருணங்களைக் கண்டிருப்போம். எவ்வளவு காலமானாலும் அது மறக்காமல் இருக்கும். முதலில் ஏமாந்து பிறகு அது கிடைத்துவிட்டால்கூட ஏமாந்த தருணம் நம் நினைவில் இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்றுதான் 'தோழி' என்ற தலைப்பிலான இந்த நாவலும் நமக்கு மிகவும் பிடித்ததாக அமைந்துள்ளது.
எளிய மனங்களை மூலதனமாக்கி நடைபெறும் அரசியல் வியாபாரங்கள், அதிகாரத்துக்கு வருபவர்கள், அவர்களைச் சார்ந்து பிழைக்க வருபவர்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்களையும் இதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் மட்டும் இருக்கும் நாவல் இது.
இதில் பெயர்களைத் தவிர வேறு எதுவுமே புனையப்பட்டதில்லை எனலாம்.
தமிழ்நாட்டின் தலையெழுத்தை சில காலம் தீர்மானித்த சில பெண்களை மிக நெருக்கமாக இருந்து ஆராய்ந்துள்ளார் நூல் ஆசிரியர். இந்த நாவலின் சிறப்பு, அரசியல் மட்டும் காரணமல்ல; பெண் மனம் என்றொரு கருத்தாக்கம் நாவலில் அதிகம் பேசப்பட்டுள்ளதும் காரணம். அதிகாரத்தில் உள்ள பெண்கள், அதிகாரத்துக்கு ஆசைப்படும் பெண்கள், அதிகாரத்தில் உள்ளவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், காலத்தில் கரைந்துவிடுகிற பெண் கதாபாத்திரங்கள் இந்த நாவலில் அழகாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ளன.
தமிழகத்தின் 40 ஆண்டுகால அரசியலை கதாபாத்திரங்கள், சம்பவங்கள், உரையாடல்கள் ஆகியவற்றின் மூலம் நாவலாகத் தொகுத்து நூலாசிரியர் வழங்கி இருப்பது சிறப்பானது. தமிழில் சமகால அரசியலைத் தொட்டுப் பேசுகிற நாவல்கள் பெரும்பாலும் உண்மையும், புனைவும் கலந்ததாகவே இருக்கும். அபூர்வமாக இந்த நாவல் வேறு முகம் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.