வியாபார வெற்றிக்கு 1000 வழிகள் - முல்லை பிஎல்.முத்தையா; பக்.272; ரூ.300; முல்லை பதிப்பகம், சென்னை-40. ✆ 98403 58301.
'வியாபாரத்தில் வெற்றி காண வழி என்ன?' என்று ஏங்கித் தவிக்கும் வியாபாரிகளுக்கு மட்டுமல்லாது, மக்களுக்கும் அவசிய தேவையான, சுவைமிக்க, பயனுள்ள விஷயங்களைக் கொண்டது இந்த நூல்.
'நல்ல சந்தர்ப்பம் எப்பொழுது உண்டாகிறது?', 'தொழில் நடத்துவது எப்படி?', 'திறமை என்பது என்ன?', 'நிர்வாகம் செய்வது என்ன?', 'விளம்பரம் எப்படி இருக்க வேண்டும்?, 'உதிர்ந்த முத்துகள்' எனும் ஆறு தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான தகவல்களை ஒருசில வரிகளில் அள்ளிக் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் அணுகுவது எப்படி? சாதிப்பது எப்படி?, அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், அணுகுவது எப்படி? என்பன உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகவல்கள் நூல் முழுவதும் நிரம்பியுள்ளன.
பேச்சு, நடை, உடை, பாவனை, அணுகுமுறை, சிந்தனை, லட்சியம்... என்று அனைத்துத் தகவல்களும் தரப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் நிலவும் தொழிலாளர்கள்- முதலாளிகள் உறவு, வாடிக்கையாளர்களுடனான நல்லுறவு முறைகளும் வழிகாட்டப்படுகின்றன.
'வியாபாரமே வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்த நூலை வாசித்தால் போதும்; வியாபாரத்தில் சாதிக்கும் அளவுக்கு வழிகாட்டும் வகையில், அவர்களுக்குத் தூண்டுகோலாக
இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பல வணிக நூல்களில் வாசித்தால் கிடைக்கும் தகவல்கள் இந்த ஒற்றை நூலில் கிடைக்கின்றன. வணிகம், பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் தவறவிடக் கூடாத நூல் என்பதோடு, வியாபாரம் செய்ய நினைப்பவர்களும், வியாபாரிகளும், இளைய தலைமுறையினரும் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.