பொருள்முதல்வாதம் ஓர் அரிச்சுவடி-இரா. பாரதிநாதன்; பக்.112, ரூ.150; புரட்சி பாரதி பதிப்பகம், சென்னை-600 055, ✆ 90430 50699.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த விசைத்தறி தொழிலாளியான, மார்க்ஸிய லெனினிய இயக்கத்தின் செயற்பாட்டாளராகவும் இருந்த ஆசிரியர், பொருள்முதல்வாதத்தைக் கற்பதிலுள்ள போதாமைகளை உணர்ந்து எளிய மக்களுக்கும் விளங்கும் வகையில் நூலாக்கித் தந்திருக்கிறார்.
தத்துவத்தை ஏன் பயில வேண்டும் எனத் தொடங்கி, கார்ல் மார்க்ஸால் எழுதப்பட்ட இந்தப் பொருள்முதல்வாதம், அடிப்படையில் மானுடத்துக்கானது என்று அறிமுகப்படுத்துகிறார்.
பொருள்முதல்வாதம் என்பது வெறும் கருத்துகளைத் தெரிந்துகொள்வதல்ல; அதுவொரு வாழ்க்கை முறை, மானுட வாழ்வியல் என்று குறிப்பிட்டு, உலகம், ஆன்மா, கடவுள், பக்தி ஆகியவற்றுக்குப் பின்னுள்ள அரசியலை விளக்குகிறார். இயக்கமும் மாற்றமும்தான் பொருள்களின் அடிப்படை.
பொருள்முதல்வாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி விளக்கும்போது, கருத்துமுதல்வாதம் பற்றியும் தெரிவித்து, தமிழக மெய்யியல்கள் பலவும்கூட பொருள்முதல்வாதக் கருத்துகளைக் கொண்டிருந்ததை நினைவுகூர்கிறார்.
தமிழ்நாட்டின் சித்தர் மரபினரின் பொருள்முதல்வாதிகளே என்பதற்கான சான்றுகளை அவர்தம் பாடல் வரிகளுடன் முன்வைப்பதுடன், கருத்துமுதல்வாதத்தின் புரட்டுகளை அவர்கள் ஏற்கவில்லை என்பதும் மேற்கோள்களுடன் விளக்கப்படுகிறது.
ஜாதி ஒழிந்தால்தான் சமத்துவம் மலரும் என்பது சரியல்ல; வர்க்கப் புரட்சி ஏற்பட்டால் ஒழிய பொருளாயத சமூகத்தில் மேற்கட்டுமானமான ஜாதி ஒழியாது. இதுவே பொருள்முதல்வாதத்தின் அடிப்படை என்று நூலை ஆசிரியர் நிறைவு செய்கிறார்.
பொருள்முதல்வாதம் அறிவதற்கான எளிய பாட நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.