வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி- தொகுப்பாசிரியர் முனைவர் து.புத்திர பிரதாப்; பக்.224; ரூ.170; இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், கோயம்புத்தூர்-641 007, ✆ 0422-2472621.
கரும்பு என்பது இனிப்பின் அடையாளம். கரும்பை விவசாய நிலங்களில் விவசாயிகள் பணத்தையும், உழைப்பையும் செலவிட்டு சாகுபடி செய்து வளர்த்தெடுத்து, விற்று காசாக்குவதற்குள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவ்வாறு உற்பத்தி செய்யும் கரும்புக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும், அதைத் தரமாக உற்பத்தி செய்ய வேண்டும். இத்தனையும் இருந்தால்தான் செலவிட்ட பணமாவது அவர்களுக்கு கிடைக்கும்.
கரும்பு விவசாயிகளின் நிலை அறிந்து அவர்கள் எவ்வாறு கரும்பை பயிர் செய்யவேண்டும், என்னென்ன மருந்துகள், உரங்கள் இட வேண்டும் என்பதை விவசாயிகளுக்கு எளிதாகப் புரியும் வகையில் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் அகில இந்திய வானொலி நிலையத்துடன் இணைந்து நடத்திய 'வளமான வாழ்விற்கு கரும்பு' என்னும் வானொலி வேளாண்மைப் பள்ளியின் விளைவாக உருவாகியுள்ளது இந்த நூல்.
இதில் இடம்பெற்றுள்ள பதின்மூன்று அத்தியாயங்களில், கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. அந்த அறிவியல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், கரும்பு விவசாயிகளின் வருவாய் பெருகும் வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டுக்கு உகந்த கரும்பு ரகங்கள், கரும்பில் திசு வளர்ப்பு நாற்று உற்பத்தி, தரமான கரும்பு விதை உற்பத்தி, கரும்பு சாகுபடியில் உழவியல் தொழில்நுட்பங்கள், உர மேலாண்மை, கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்கம், கரும்பிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் உள்ளிட்ட 13 அத்தியாயங்களும் கரும்பு சாகுபடிக்கான பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.