கலைமகள் தீபாவளி மலர் 2025

சுமார் 20 சிறுகதைகள் இந்த மலரில் இடம் பெற்றுள்ளன.
கலைமகள் தீபாவளி மலர் 2025
Published on
Updated on
1 min read

கலைமகள் தீபாவளி மலர் 2025-கீழாம்பூர் எஸ்.சங்கர சுப்பிரமணியன்; பக். 222; ரூ.200, சென்னை-600 028, ✆ 044-2498 1699.

'மும்மயிலான் காப்பு'டன் தெய்வீகமாகத் தொடங்கிறது 'கலைமகள்' தீபாவளி மலர்.

ஞானிகள், அருளாளர்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 'தமிழ் தந்த முனிவர்' கட்டுரையில் அகத்தியரின் சிறப்புகளை விவரிக்கும்போது, அவருக்கும் ராவணனுக்கும் ஏற்பட்ட யாழிசைப் போரில், ராவணனின் தோல்வியை சொல்லும்போது, 'ஒரு கலைஞனுக்கு தோற்று நிற்பதொன்றும் அவமானமாகாது' என்றொரு வரி நெஞ்சத்தைக் கிள்ளுகிறது.

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தியின் 'பொருளியலும் திருக்குறளும்' கட்டுரை, தனிமனித வாழ்விலும், அரசியலிலும் பொருள் எத்தனை விளைவுகளை ஏற்படுத்துதிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.

கிருஷ்ணதேவராயர், ராமகிருஷ்ண இயக்க வரலாற்றைக் கூறும் மாலனின் 'ஆண்டவன் விடுத்த அழைப்பு', கீழாம்பூர் எஸ்.சங்கரசுப்பிரமணியனின் சிறப்புக் கட்டுரையான தாய்க்கும், காதலிக்கும் கோயில் எழுப்பிய ராஜேந்திர சோழனின் செய்திகள் வரலாற்றுப் பொக்கிஷங்கள்.

அட்டைப்படக் கட்டுரையான 'கண்ணனின் யசோதை'யில் கண்ணனை வளர்க்கும் பெரும் பேறுக்கு உரியவளாகிவிட்ட யசோதையை பெரியாழ்வார், நாராயண தீர்த்தர், நாராயண பட்டத்திரி ஆகியோர் ரசித்துப் பாடியுள்ளனர்.

பகவான் ரமணர், சாரதாம்மா, சத்ய சாய், நற்றிணைத் தமிழரா நாம்?, கம்பன் சொன்னதும் சொல்லாததும் மற்றும் நேதாஜி, காந்தியடிகள் புகழ்ந்த அஞ்சலை அம்மாள், நடிகை பானுமதி கட்டுரைகள் படிக்க வேண்டியவை. சுமார் 20 சிறுகதைகள் இந்த மலரில் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com