ஓம்சக்தி

ஆன்மிகம், இலக்கியம், கவிதை, தன்னம்பிக்கை, பிரார்த்தனை, சாதனை, வரலாறு, தொழில்நுட்பம், பயணம் குறித்த கட்டுரைகள், சிறுகதைகள் என பல்சுவை இதழாக இது அமைந்துள்ளது.
ஓம்சக்தி
Published on
Updated on
1 min read

ஓம்சக்தி- ம.மாணிக்கம்; பக். 324; ரூ.125; சக்தி சுகர்ஸ் லிமிடெட், 180, ரேஸ்கோர்ஸ் சாலை, கோவை - 641 018, ✆ 0422 4322471.

துறவு பூண்டாலும் மக்களின் பாதிப்புகளைக் கண்டு மனமுருகி சமூகப் பணியாற்றிய குன்றக்குடி 45-ஆவது ஆதீனத்தின் பணிகளை ஆசிரியர் ம.மாணிக்கம் நினைவுகூர்ந்துள்ளார். தமிழரின் விதிக் கோட்பாடு குறித்து இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி திருப்பூர் கிருஷ்ணனும், துக்கத்தை நீக்கிக் கொள்வதே வேதாந்தத்தின் சாரம் என்பதை சுவாமி விமூர்த்தானந்தரும் எளிய நடையில் கூறியுள்ளனர்.

கட்டடக் கலை, நீர் மேலாண்மை, வானியல், கணிதம், கடற்படையில் நிபுணத்துவம், வங்கம் வரை சென்று வெற்றிக் கொடி நாட்டி கங்கை நீரைக் கொண்டு வந்தது, நவீன மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்தை வென்றது உள்ளிட்ட தகவல்கள் ராஜேந்திர சோழன் தொடர்பான கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

குலதெய்வ வழிபாடு, பித்ருக்கள் வழிபாட்டின் முக்கியத்துவத்தை ஒரு கட்டுரை விவரிக்கிறது.

செஞ்சிக் கோட்டையின் அமைப்பு, பின்னணி, ராஜா தேசிங்கு, அமைவிடம் என அரிய தகவல்கள் சுவாரஸ்யமாக கூறப்பட்டுள்ளன.

உள்நாட்டில் பயணம் குறித்து ரவிபிரகாஷ், அமெரிக்கப் பயணம் குறித்து கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரு பிருந்தாவனம் (கிருஷ்ணர் கோயில்) கட்டுரை நேரில் பார்க்கும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் பவானி சங்கமேஸ்வரர் கோயிலின் சிறப்புகள் படிக்கத் தூண்டும் வகையில் கூறப்பட்டுள்ளன.

ஆன்மிகம், இலக்கியம், கவிதை, தன்னம்பிக்கை, பிரார்த்தனை, சாதனை, வரலாறு, தொழில்நுட்பம், பயணம் குறித்த கட்டுரைகள், சிறுகதைகள் என பல்சுவை இதழாக இது அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com