

ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர் 2025- எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்; பக்.80; ரூ.100; ஊரப்பாக்கம் மேற்கு, செங்கல்பட்டு மாவட்டம், ✆ 98403 25245.
ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலரில் மொத்தம் 19 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சாயி ஒரு தெய்வீகப் புதிர் என்ற தலைப்பிலான கட்டுரையில் ஷீரடி சாயி பாபாவின் இளமைக்காலம் குறித்த பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. ஷீரடி சாயி பாபாவின் பக்தருக்கு ஏற்பட்ட அனுபவத்தை 'நம்பினால் நம்புங்கள்' கட்டுரை வெளிப்படுத்துகிறது.
ஸ்ரீ சாயி சத்சரிதம் ஷீரடி சாயி பாபாவின் பக்தர்களுக்கு வேதம் போன்றது என்பதை 'நடந்ததெல்லாம் கனவா' என்ற கட்டுரையால் அறிந்து கொள்ள முடிகிறது. ஷீரடிக்கு சென்றுவரும் பக்தர்கள் தங்கள் பயணம் குறித்தும், அங்கு சாயி பாபாவை தரிசனம் செய்தது குறித்து சிலாகித்து தந்திருக்கும் தகவல்கள் வியப்பைத் தருகின்றன. 'சாயிநாத ஸ்தவன மஞ்ஜரி' மலர் முழுவதும் ஆங்காங்கே சிறு சிறு பெட்டிச் செய்திகளாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கபீர்தாசர் என்றொரு ஞானி, தொலைந்து போன குதிரை, சாயி பாபா பெயர் வந்த விதம் ஆகிய கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சாயி பக்தர்களை நிச்சயம் கவரும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் பாலகங்காதர திலகர் சுத்தானந்த பாரதியுடன் ஷீரடிக்குச் சென்று சாயி பாபாவை சந்தித்த செய்தியும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஷீரடி சாயி பாபா பக்தர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமாக ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.