விகடன் தீபாவளி மலர்

புதியவற்றுக்கு வாய்ப்பளித்து தன்னை மேன்மைப்படுத்தினாலும் பாரம்பரிய அடையாளத்தைத் தொலைக்காமல், நவீன அலங்காரத்துடன் வந்திருக்கும் மலராக விகடன் தீபாவளி மலர் இருக்கிறது.
விகடன் தீபாவளி மலர்
Published on
Updated on
1 min read

விகடன் தீபாவளி மலர் 2025-கா.பாலமுருகன்; பக்.400; ரூ.190; சென்னை-600 002, ✆ 044-6680 2980.

குன்றக்குடி அடிகளார், நாகூர் ஹனிபா ஆகியோரின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் வந்திருக்கும் கட்டுரைகள் சிறப்பானவை.

ராஜ ராஜ சோழனின் தோற்றத்தை நடிகர் திலகத்துக்குப் பொருத்தியது எப்படி என ஏ.பி. நாகராஜன் குறித்து அவரது மகள் விஜயலட்சுமி பகிர்ந்து கொண்ட திரைப்பட பகுதி பாதுகாக்க வேண்டிய பக்கங்கள்.

சிறந்த உள்ளாக்கங்களுடன் கூடிய சிறுகதைகளை தரக்கூடிய கதாசிரியர்களிடமிருந்து இருந்து சிறுகதைகள் பெறப்பட்டு இருக்கின்றன. கவிதைகள் பலவித உணர்வுகளின் வெளிப்பாடு. வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், கெüரவிக்கப்பட வேண்டிய கலைஞர்களை கெüரவிக்கும் விதமாகவும் இசைப் பகுதி இடம்பெற்றிருக்கிறது.

கியூபா தலைநகரின் எளிமை, செனாப் ரயில் பாலத்தின் பிரம்மாண்டம், ஜின்களின் உலகம், பந்தத் திருவிழா, காணிகளின் வாழ்வியல் என வியப்பூட்டும் தகவல்கள் அடங்கிய பகுதிகள் நிறைவைத் தருகின்றன.

சுற்றுலாப் பகுதியில் கர்நாடகத்தின் இரட்டை அருவி, கேரளத்து மலரிக்கல், உலகின் சவாலான மலைப் பாதைகளின் பயணம், ஆன்மிகத் திருத்தலங்களின் தரிசனங்களையும் நாம் ஆன்மிகச் சுற்றுலாவாகவே வாசித்து ரசிக்கலாம்.

புதியவற்றுக்கு வாய்ப்பளித்து தன்னை மேன்மைப்படுத்தினாலும் பாரம்பரிய அடையாளத்தைத் தொலைக்காமல், நவீன அலங்காரத்துடன் வந்திருக்கும் மலராக விகடன் தீபாவளி மலர் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com