மனிதரைப் படிப்போம்

தமிழ்கூறும் நல்லுலகம் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.
மனிதரைப் படிப்போம்
Published on
Updated on
1 min read

மனிதரைப் படிப்போம்- தீபிகா தீனதயாளன் மேகலா; பக்.144; ரூ.225; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-600 083; ✆ 96003 98660.

தமிழகத்தைச் சேர்ந்த நூலாசிரியர், கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பல்கலைக்கழக ஆய்விதழில் இவரது பட்ட ஆய்வும் வெளியாகியுள்ளது. தான் கற்ற மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து இணையத்தில் கட்டுரைகளை எழுத, அது நூல் வடிவமாகியுள்ளது.

வட இந்திய, இந்திய சமூகங்களை ஒப்பிட்டு மானுடவியல் பார்வையால் அடையாளம், அரசியலின் விரிவான ஆய்வுகள், பல்வேறு பண்பாட்டு உரையாடல்கள், மானுடவியல் கண்ணோட்டத்தில் பெண்களின் முன்னேற்றம் குறித்து நூலாசிரியர் தனது ஆழ்ந்த கோணத்தில் விவரிக்கிறார். சமூகக் கட்டமைப்புகள், அதிகார உறவுகளின் மீதான நுணுக்கமான பார்வையை அவர் கையாள்கிறார்.

மனிதப் பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்தில் இருந்து நிலத்துடனான மனிதர்களின் தொடர்பு, தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது என்று நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.

5 தலைப்புகளில் 20 கட்டுரைகளில், வரதட்சிணையின் பரிணாம வளர்ச்சி, விதவை- மலடியின் எதிர்ச்சொல் என்ன?, அடையாளத்தில் பெருமை என்ன?, புலம்பெயர் தமிழர்களின் அடையாளச் சிக்கல், இனப் படுகொலையின் தொடக்கப் புள்ளி, மனித நினைவுகளின் எச்சங்கள், தேசிய வாதம், வட இந்தியா- தென் இந்தியா பகுப்பாய்வு என்று தேசிய அளவிலான, உலகளாவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசும் நூலாசிரியர் அதற்கான தீர்வுகளுக்கும் வழிகோலுகிறார்.

பக்கத்துக்குப் பக்கம், பத்திக்குப் பத்தி பல்வேறு தகவல்கள் எடுத்துரைத்துள்ளதில், நூலாசிரியரின் அரசியல் அறிவு வியப்பைத் தருகிறது. தமிழ்கூறும் நல்லுலகம் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com