நாவல் ஆய்வு முறை

நாவலை எப்படி ஆராய வேண்டும் என்று கூறும் நூலாகும்.
நாவல் ஆய்வு முறை
Published on
Updated on
1 min read

நாவல் ஆய்வு முறை-முனைவர் பெ.சுப்பிரமணியன்; பக்.142; விலை ரூ. 160; காவ்யா பப்ளிகேஷன், சென்னை- 24. ✆ 98404 80232.

மனித சமூகத்தின் தொடக்கக் காலத்தில் குழு மற்றும் குல அமைப்பாக, அதாவது சிறு அமைப்புகளாக மனித இனம் வாழ்ந்தபோது, பாடுபொருளாக பாடல்களே இருந்தன. அதன் வருணனைகள், உவமைகள்கூட இயற்கையாகவே இருந்தன.

19-ஆம் நூற்றாண்டில் தொழில் புரட்சியின் விளைவால் நாவல் இலக்கியம் தோற்றம் பெற்றது. அச்சு இயந்திரம், காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது. உரைநடை தோன்றியது. அதன் விளைவால் நாவல் இலக்கியம் வளர்ந்தது. நாவல் இலக்கியம் தோன்றுவதற்கு முன்பு, காப்பிய இலக்கியம் செல்வாக்கு பெற்றிருந்தது. காப்பியம் நிலமானிய சமூக இலக்கிய வகையாகும்.

நாவல் என்பது எடுத்துரைத்தல் முறையில் அமைவது, சங்கிலித் தொடராக நிகழ்ச்சிகளைக் கொண்டது, நெகிழ்வான கதைப் பின்னல், போதுமான அளவுக்குப் பக்கங்கள், பலதரப்பட்ட பாத்திரங்கள், உரைநடை வடிவம், நாவலாசிரியருக்கு போதுமான உலக அறிவு, சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டும் வல்லமை இருக்க வேண்டும்.

இவ்வாறான விஷயங்களைத்தான் 'நாவல் ஆய்வு முறை' விவரிக்கிறது. இந்நூலில், நாவல் கலை, கதை சொல்லும் முறை, நாவலின் கோணம் அல்லது நோக்குநிலை, கதைப் பின்னல், அதன் அமைப்பு முறை, பாத்திரப் படைப்பு முறை, பாத்திரப் பேச்சு, பின்புலம், நாவலில் உத்திமுறைகள், நாவலில் மொழி நடை ஆகிய தலைப்புகளில் சிறுசிறு கட்டுரையாக விளக்கப்பட்டுள்ளன.

நாவலின் வடிவம், வகைமை, கதை மாந்தர்கள், புனைவு மொழி, கதையாடல் களம் என அனைத்திலும் மரபாகத் திகழும் கோட்பாடுகளைப் பல்வேறு நாவல்களின் சான்றாதாரங்களோடு நூலாசிரியர் விளக்கிச் சொல்கிறார். நாவலை எப்படி ஆராய வேண்டும் என்று கூறும் நூலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com