
இந்தியாவைக் கண்டடைதல் - தரம்பால்; தமிழில்-ஸ்ரீதர் திருச்செந்துறை; பக்.440; ரூ.550; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127. ✆ 81480 66645.
ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே இந்தியா முன்னேறியது என்ற பரவலான கருத்துக்கு எதிராக வலிமையான ஆதாரங்களை இந்நூல் முன்வைக்கிறது.
ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு முன்பு இருந்த இந்திய சமூகம்; சுதந்திரத்துக்கு பின்பு சமகால இந்தியா; உலகளாவிய அளவில் மேற்குலகின் வல்லாதிக்கம் என்று மூன்று பிரிவுகளில் இந்நூல் விரிகிறது.
ஆங்கில வல்லாதிக்கத்துக்கு முன்பு ஓர் இந்திய விவசாயியின் ஆண்டு வருமானம் ஆங்கில விவசாயியைவிட அதிகம் என்பதும், மேற்கத்திய விவசாயக் கருவிகளைவிட இந்திய உற்பத்திக் கருவிகள் தரமானவையாக இருந்தன என்பதும் நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் நூலாசிரியர் பகிர்ந்துள்ள தரவுகள் உண்மையை விளம்புகிறது.
கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா சிறந்து விளங்கியதையும் இந்நூல் கூறுகிறது.
இந்தியா உண்மையில் வறுமையான தேசமாக இருந்திருந்தால் அந்நியர்கள் ஏன் இங்கு வணிகம் செய்ய வரவேண்டும்? 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஏன் ஆள வேண்டும்? என்பன உள்ளிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்களில் இருந்த அதிகாரபூர்வ கடிதப் போக்குவரத்தில் இருந்த ஆதாரங்களைப் பதிலாகத் தருகிறது இந்நூல்.
உலக மயமாக்கல், நுகர்வுக் கலாசாரம், இந்தியாவின் மீதான அமெரிக்காவின் அடாவடி வரிவிதிப்பு ஆகியவற்றின் பின்னணியில், இந்தியாவின் உண்மையான கலாசார மரபுகளை மீட்டெடுக்க விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.