
உக்ரைன் போர்க்களம்!-ஜெகாதா; பக்.304; ரூ.300; எஸ் பப்ளிகேஷன்ஸ்; சென்னை-600 122. ✆ 80158 27644.
உக்ரைன் மீது 2022, பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. ரஷியாவின் படைபலத்தை ஒப்பிடுகையில் சில நாள்களிலேயே இந்தப் போர் முடிவுக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக மூன்றரை ஆண்டுகளைக் கடந்து போர் நீடித்து வருகிறது. போர் நிறுத்தம் ஏன் இதுவரை ஏற்படவில்லை, எப்போது ஏற்படும் என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்நூல்.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இணைய உக்ரைன் விரும்பியதுதான் ரஷியாவின் படையெடுப்புக்கு முதல் காரணம்.
உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய தாக்கம், உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்றுவரும் மாணவர்களின் எதிர்காலம், அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியளித்தபடி உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த முடியாதது ஏன்? புதினை எதிர்த்து அரசியல் செய்த அலெக்ஸி நவால்னி, ரஷியாவுக்கு வேலை தேடிச் செல்லும் வெளிநாட்டவர்கள் ரஷிய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்படுவது என ஏராளமான தகவல்கள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷிய மண்ணில் மற்றொரு நாட்டின் ஆக்கிரமிப்பு இப்போதுதான் நடந்திருக்கிறது. ரஷியாவின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படையினர் ஊடுருவி சில பகுதிகளைக் கைப்பற்றியது குறித்த தகவல்கள் நம்ப முடியாத அளவில் வியப்பை ஏற்படுத்துகிறது. உக்ரைன் முழுவதும் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் மக்கள் எதிர்கொள்ளும் துயரம் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உக்ரைன்-ரஷியா போர் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள உதவுகிறது இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.