கல்லில் உறைந்த வரலாறு கிருஷ்ணகிரி மாவட்ட தொன்மையும் வரலாறும் - கல்வெட்டுக் காவலன் செ.கோவிந்தராஜ்; பக்.158; மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி.
'தொல்லியலாளர்களின் சொர்க்கம்' என்று கூறப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வரலாற்றுத் தடங்கள் காணப்படுகின்றன. இவற்றை ஆவணப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரிரியர் கூட்டணியின் அங்கமான கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு, ஆவணப்படுத்தும் மையம் சார்பில் 2018-இல் கல்வித் துறை இணை இயக்குநர் கே.பி.மகேஸ்வரி தலைமையில் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது.
பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலதரப்பினரையும் சந்தித்து, 8 ஆண்டுகள் உழைப்பில் இந்த நூல் உருவாகியுள்ளது.
தொல்பழங்காலம், கல்வெட்டுகள், சிற்பங்கள், கோயில்கள், பாறை ஓவியங்கள், நடுகற்கள், காளைச் சண்டை, தலைபலியிடப்பட்ட பெண் தெய்வ வழிபாடு, மலைக்கோட்டைகள், புதிய கற்கால வாழ்விடங்கள், பெருங்கற்படைக்கால கல் திட்டைகள் உள்ளிட்டவை வண்ணப் புகைப்படங்களுடன் அவற்றின் வரலாற்றையும், அமைவிடத்தையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
சோழர்கள், விஜயநகரர்கள், போசாளர்கள் கிருஷ்ணகிரியை ஆண்ட வரலாறு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
சிற்பங்களிலும் ஓவியங்களிலும் அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கை, பழக்க- வழக்கங்கள், போர்முறை, தானங்கள், உணவு முறைகள், ஆண்- பெண் உறவு என்று பலவகைகளிலும் எழுதிவைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியின் வேர்களைத் தேடிய இந்த நெடும்பயணத்தைத் தொடங்கியவர்கள், உறுதுணையாக இருந்தவர்கள், வழிகாட்டியவர்கள் என்று வரலாற்றைத் தொகுக்கும் பணிக்கு உடனிருந்தோரை சுட்டிக் காட்டி அவர்களின் செயலுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரப்பெற்றோம் (02.03.2026)

வரப்பெற்றோம் (23-02-2026)
உதயபானு கான்மலர்

வரப்பெற்றோம் (16-02-2026)
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

