திருவள்ளுவரின் அறிவுக் கோட்பாடு, முனைவர் சு. வேல்முருகன், பக்.136, ரூ.150, கம்பன் பதிப்பகம், முருங்கப்பாக்கம், புதுச்சேரி- 605 004, ✆ 99943 62455.
அறிவெனப்படுவது யாது? பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு - அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் பேதைமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவு.
அறிவின் இயல்பு: தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது - தன்னைவிட தனது குழந்தைகள் அறிவுபெறுவதே உலகின் அனைத்து உயிருக்கும் இனிமையானது, இது அறிவின் இயல்புப் பண்பு.
அறிவின் தெளிவு: அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு - அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந்நான்கு பண்புகளையும் நிலையாக உடையவன் அறிவின் தெளிவுடையவன்.
அறிவின் பயன்: அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை - பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை. இது அறிவின் பயன்.
அறிவைப் பெறும் வழி: நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும். பல அரும்பெரும் நூல்களைப் படித்தாலும், அதன்படி முயல வேண்டும், இதுவே அறிவைப் பெறும் வழி.
அறிவுக்கான இலக்கணம்: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் - பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
வள்ளுவத்தின் இயங்கியல்: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் - உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்.
உடைமைகளில் அறிவும் ஒரு உடைமை என்கிறார் உலகிற்கே அறிவு புகட்டிய முதல் ஆசான். அவரின் கோட்பாடுகள் அக்கால மூடப் பழக்க வழக்கங்களை கடுமையாக சாடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொழில் செ(ய்)ய விரும்பு

பழமொழி நானூற்றில் கருத்து வெளிப்பாடு

வரப்பெற்றோம் (02.03.2026)
குறள் விருந்து! கதை விருந்து!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

