முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர் எல்லார்க்கும் எல்லாம்-ப.திருமாவேலன், பக். 192; ரூ.500; கவிதா பப்ளிகேஷன், சென்னை- 600 017, ✆ 044-4218 1657
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நான்காண்டு கால (2021-25) ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சட்டங்கள், சாதனைகள், இவற்றால் மக்களுக்கு கிடைத்த பலன்கள் குறித்த செய்திகளின் தொகுப்பு இந்நூல்.
இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் அமைக்கப்பட்ட ஆட்சிகள் அனைத்தும் தலைவர்களின் பெயரால்- முதல்வர்களின் பெயரால் மட்டுமே அழைக்கப்பட்டு வருகின்றன. முதல்முறையாக தன்னுடைய ஆட்சியை கொள்கைபூர்வமாக 'திராவிட மாடல் ஆட்சி' என்று அடையாளப்படுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக் கூறும் நூலாசிரியர், அந்த திராவிட மாடல் என்றால் என்ன என்பதை அரசின் திட்டங்கள், கொள்கைகள் வாயிலாக தெளிவாக விளக்கியுள்ளார். பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தொகுத்து தந்திருக்கிறார். நாத்திகர்களின் கட்சி என்று கட்டமைக்கப்பட்ட திமுக அரசு ஆன்மிகத்துக்காக ஆற்றியுள்ள பணிகளின் பட்டியல் வியப்பை ஏற்படுத்துகிறது.
நான் முதல்வன், புதுமைப் பெண், இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி, சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, எண்ணும் எழுத்தும் இயக்கம் என கல்வித் துறைக்கான திட்டங்களும், இந்தத் திட்டங்களால் மாணவர்கள் பெற்ற பயன்களும் குறித்து சிறு சிறு கட்டுரைகள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன.
இதுபோன்று விவசாயிகள், மகளிர், தமிழ் மொழிக்கான திட்டங்களும் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. புள்ளிவிவரங்களின் தொகுப்பாக இருந்தாலும் அதை சுவாரசியமாகப் படிக்கும் வகையில் அளித்ததில் வெற்றி பெற்றிருக்கிறார் நூலாசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.