கிருதுமால் நன்செய் (மதுரை வட்டாரச் சிறுகதைகள்)

எளிய தமிழில், தென் மாவட்ட வாழ்வியலைக் கதைகளின் ஊடே கொண்டு வருவதனால், சிறுகதைப் பிரியர்களுக்கு நல்ல அனுபவம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கிருதுமால் நன்செய் (மதுரை வட்டாரச் சிறுகதைகள்)
Updated on
1 min read

கிருதுமால் நன்செய் (மதுரை வட்டாரச் சிறுகதைகள்)- அய்யனார் ஈடாடி; ரூ.144; ரூ.150; யாப்பு வெளியீடு, சென்னை-76; ✆90805 14506.

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்முறையும் உளவியலும் பாதைமாறா நெடுவழிப் பயணத்தின் கூறுகளை உள்கொண்டிருக்கும் சூழ்நிலையில், பழைய வாழ்க்கை முறையை நினைவுப்படுத்துவதன் மூலம் புதுமை நோக்கிய நமது வாழ்வியல் பயணத்தில் தடங்கலின்றிப் பாதம் பதிக்க முடியும் என்று நூலாசிரியர் முடிவு செய்து, நவீனப்படுத்தியுள்ளார்.

16 சிறுகதைகளில் உள்ள கதைமாந்தர்கள் ஏழைகளாகவும், விடாப்பிடியான உழைப்பாளிகளாகவும், மனித நேய வாழ்முறையைக் கொண்டாடுபவர்களாகவும் இருப்பதால், பெண்களின் உழைப்பு குடும்பங்களை வழிநடத்தி அதன்மூலம் இந்தச் சமுதாயத்தைத் தன்னிருப்பில் இருந்து நழுவாமல் பாதுகாக்கிறது என்பதை நூலாசிரியர் எடுத்தியம்புகிறார்.

உழவு செய்வோர், யாசகம் பெறுவோர், ஏழைகளுக்கு இலவசமாக மூலிகை வைத்தியம் செய்வோர் என்று கதைகளின் வாயிலாக, சமூகத்துக்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.

'சில்லறைக்காசுகள்' என்ற சிறுகதையில் ஏழைகளுக்கு உதவி செய்திடுவதன் அவசியம், 'நடுக்கம்மாய்' என்ற சிறுகதையில் நில உரிமையாளர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையேயான போட்டிகள், பொறாமைகளை விளக்கியது, 'சிறை' எனும் சிறுகதையில் விவசாயத்தின் மகத்துவம்... என்று ஒவ்வொரு கதையும் புதுப்புது அனுபவம்.

எளிய தமிழில், தென் மாவட்ட வாழ்வியலைக் கதைகளின் ஊடே கொண்டு வருவதனால், சிறுகதைப் பிரியர்களுக்கு நல்ல அனுபவம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com