அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் - 17

பெண்டிரே! சிவந்த கண்ணை உடைய பெருமாலுக்கும், திசைமுகனான பிரம்மனுக்கும், ஏனைய தேவர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை நமக்கு
அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் - 17
Published on
Updated on
1 min read

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இல்லாததோர் இன்பம்நம் பாலதாக்

கொங்குண் கருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி

இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்!

விளக்கம்:

பெண்டிரே! சிவந்த கண்ணை உடைய பெருமாலுக்கும், திசைமுகனான பிரம்மனுக்கும், ஏனைய தேவர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை நமக்கு அள்ளித்தருபவள் நறுமணமிக்க கருங்கூந்தலையுடைய நம் அன்னை உமாதேவி. அவள் நம்மைச் சீராட்டவும், நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளும் வகையில், தன் சிவந்த தாமரைத் திருவடிகளைத் தரிசிக்கச் செய்தவனும், அனைவருக்கும் அரசனாக விளங்குபவனும், அடியவர்களுக்குக் கிடைத்தற்கரிய அமுதமாகத் திகழ்பவனுமாகிய நம்பெருமானைப் போற்றிப்பாடி, தாமரைகள் மலர்ந்துள்ள இக்குளத்தில் நீராடுவோமாக!

விளக்கவுரை:பேராசிரியர் ஆ. குமரவேள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com