திருமணம் என்பதன் உண்மையான பொருள் என்ன?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. “இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தான் தேவன் அன்று’ என்று பாடுகிறோம்.தெய்வ நிச்சதப்படி நடக்கிறது என்பது நம் முன்னோர்களது நம்பிக்கை.எப்பொழுது கெட்டிமேள சப்தம் கேட்கும்?
திருமணம் என்பதன் உண்மையான பொருள் என்ன?
Updated on
1 min read

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. “இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தான் தேவன் அன்று’ என்று பாடுகிறோம்.

தெய்வ நிச்சதப்படி நடக்கிறது என்பது நம் முன்னோர்களது நம்பிக்கை.

எப்பொழுது கெட்டிமேள சப்தம் கேட்கும்?

“சீக்கிரத்தில் திருமணம் நடக்கும்; கோசார குரு சுக்ரனைப் பார்க்கிறார்” என்கிறார் ஜோதிடர்.

வாழ்வு சிறக்க வேண்டுமானால் பொருத்தங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

நட்சத்திரம் தெரிந்தால் அநேகவிதமான பொருத்தங்கள். தெரியாதவர்களுக்கு பெயர் பொருத்தம். சுபசகுனம்  புஷ்பங்கள் குங்குமம் தெய்வ சந்நிதியில் போட்டுப் பார்த்துச் சொல்வார்கள். தனிப்பட்ட முறையில் ஜாதகம் அலசப்படுகிறது. ஏதோ ஒரு வழியில் சாஸ்திரம் அறிந்தவர்கள் இவைகளை நம்பிச் செய்கிறார்கள். உயர்ந்த வாழ்வு  ஒற்றுமை  குறையற்ற வாழ்க்கை அமைய முன்னோர்கள் “திருமணம்’ என்பதை உடலுறவுக்காகவோ, வாழ்க்கையின் தேவைக்கு மட்டுமே என்று கருதாமல் புனித சடங்கு என்று பல ஆக்கப்பூர்வமான கிரியைகளை உடன் வைத்து நடத்தச் சொல்லியுள்ளார்கள்.

திருமணம் செய்யும் முறை, அதிலுள்ள நிகழ்ச்சிகள், அதன்பின் பொறுப்புகள்  உரிமைகள்  கடமைகள் மிகவும் போற்றக்கூடியனவாய் இருந்தது.

பிணைப்பு  மனைவி  பத்னி, இல்லத்தரசி, துணைவி, என்று போற்றினார்கள்.

கன்யாதானம், திருமாங்கல்ய தாரணம், பாணிக்ரஹனம், ஸப்தபதி, லாஜஹோமம்  ஆகிய ஐந்து அம்சங்கள் அவசியமானது.

தெய்வ வழிபாடு, பிரார்த்தனை, மாப்பிள்ளை அழைப்பு, பவித்ரம் அணிவது  விரதம், லக்கின பத்திரிகா  நிச்சயதார்த்தம், ரக்ஷõ பந்தனம், “பல தியாம்  கன்யாம்  தர்மப் பிரஜார்த்தம் வ்ருணீமஹே!’

உத்தம கன்னிகையான இவளை தர்ம வழிநடந்து, பிரஜைகளைத் தோற்றி வைப்பதற்குக் கொடுக்க வேண்டும்” என்று பிள்ளை வீட்டார் கேட்க பெண் வீட்டார் “தாஸ்யாமி’ கொடுக்கிறேன் எனக் கூறுகின்றனர்.

“கன்யாம் கநக சம்பந்தாம், ஸர்வாபரண பூஷிதாம் தாஸ்யாமி சம்பவே துப்யம் பிரமலோக சிரீர்ஷய”

பரிசுத்தம், இளமை, பெண்ணிற்குரிய எல்லா குணங்களோடும் சிவபெருமானின் துணை கொண்டு நற்குணத்தோடு இல்லற தர்மத்தைச் செய்து வர கொடுக்கிறோம் என்பர்.

மாங்கல்ய தாரணம் கட்டுப்பாட்டுக்கு அறிகுறி. மங்கள வஸ்துக்களைப் பூசி, பட்டில் வைத்து அஷ்டசித்திகள்  அஷ்டலக்ஷ்மிகள், ஆதார சக்திகளோடு பூஜித்து, அஷ்ட வசுக்களையும் அஷ்ட நாகங்களையும் சிந்தித்து ஆசாரியார் ஜபித்து மூத்தவர்கள் கையால் தொட்டு ஆசீர்வதிக்க மந்திர ஒலியுடன் மங்கல ஒலி கெட்டிமேளம் கொட்ட,....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com