

தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் புதன்கிழமை (மே 14) சித்ரா பௌர்ணமி விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 400 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலுக்கு தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
கண்ணகி கோயிலுக்கு குமுளியில் இருந்து 14 கி.மீ., தூரம் ஜீப் மூலமும், கூடலூரில் இருந்து பளியன்குடி வழியாக ஆறரை கி.மீ. தூரம் நடந்தும் செல்லலாம்.
இக் கோயில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, கேரளப் பகுதியில் இரு மாநில போலீஸார் மற்றும் வனத் துறையினர் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 3 துணைக் கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், 35 சார்பு-ஆய்வாளர்கள் உள்பட மொத்தம் 400 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.