

திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலின் 24 கால் மண்டபத்தின் கல் தூண் ஒன்று திங்கள்கிழமை சரிந்து விழுந்தது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் திருவலத்தில் பழைமை வாய்ந்த அருள்மிகு தனுமத்யாம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்தகைய சிறப்பு பெற்ற திருவலம் கோயிலில் மூலவர் சந்நிதிக்கு எதிரே வழக்கத்துக்கு மாறாக கிழக்கு நோக்கி நந்தி சிலை உள்ளது.
இந்த நந்தி சிலை உள்ள 24 கால் மண்டபத்தின் கல் தூண் ஒன்று திங்கள்கிழமை இரவு சரிந்து நந்தி மீது விழுந்து கிடந்தது. நடைதிறக்க செவ்வாய்க்கிழமை வந்த அர்ச்சகர் இதனைப் பார்த்தார். தகவலறிந்து கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் அங்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து கல் தூணை நிலை நிறுத்தும் பணியில் கோயில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கல் தூணின் அடியில் கோயிலின் கழிவுநீர்க் கால்வாய் உள்ளது.
இதன் காரணமாக கல் தூண் சரி ந்து விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தொடர்ந்து புனரமைப்புப் பணி நிறைவடைந்ததும் சிறப்புப் பரிகார பூஜைகள் செய்ய இருப்பதாகத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.