சனிபகவான் எந்த இடத்தில் இருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவார்? 

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி....
சனிபகவான் எந்த இடத்தில் இருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவார்? 
Published on
Updated on
1 min read

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் யாருமில்லை. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அப்படிப்பட்ட சனி பகவான் உங்களுக்குத் தரும் பலன்களைப் பற்றி காண்போம். 

ஜென்ம ராசியில் அதாவது ஒன்றாம் ராசியில் சஞ்சரிப்பதை ஜென்ம சனி என்றும், இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது பாத சனி என்றும் ஏழரை ஆண்டு சனி காலம் உள்ளது.

சனிபகவான் 1-ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மசனி என்பர். இந்தக் காலகட்டத்தில் வீண் பிரச்னைகள், உடல் உபாதைகள் உண்டாகும். 

2-ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்னைகள், வீண் வாக்குவாதம், சொத்தில் நஷ்டம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.

சனிபகவான் 3-ம் வீட்டில் இருந்தால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி, தைரியம் தாராளமான பண வரவுகள் உண்டாகும்.

4-ம் வீட்டில் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும், 7-ல் சஞ்சரிப்பதைக் கண்டக சனி என்றும் கூறுவார்கள். மேலும் இந்தக் காலகட்டத்தில் கல்வியில் இடையூறு, தாய்க்கு தோஷம், அசையா சொத்து அமைய இடையூறுகள் உண்டாகும்.

5-ம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம், பூர்வீக தோஷம் மற்றும் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

சனிபகவான் 6-ம் வீட்டில் இருந்தால் எதிரிகளைப் பந்தாடும் பலம், வலிமையான வாழ்க்கை மற்றும் எதிர்பாராத பண வரவுகள், துணிவுடன் வாழும் அமைப்புகளும் உண்டாகும்.

7-ம் வீட்டில் சனி இருந்தால் திருமண தாமதம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.

8-ம் வீட்டில் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம், எதிரிகளால் கண்டம் மற்றும் கண்களில் பாதிப்பு உண்டாகும். அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும்.

9-ம் வீட்டில் சனிபகவான் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.

10-ம் வீட்டில் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு அடிமைத் தொழில், மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 

சனிபகவான் 11-ம் வீட்டில் இருந்தால் நோயற்ற வாழ்வு, எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.

12-ம் வீட்டில் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள் ஏற்படும்.

டிசம்பர் 19 அன்று நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் சனிபகவான் உங்கள் ராசிக்கு எந்த இடத்தில் வரப்போகிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com