வாஸ்து சாஸ்திரப்படி பூஜை அறை எங்கு அமைக்க வேண்டும்?

நாம் குடியிருக்கும் வீட்டில் பூஜை அறையை எங்கு வைக்க வேண்டும்,  அதனால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி பார்ப்போம்.
வாஸ்து சாஸ்திரப்படி பூஜை அறை எங்கு அமைக்க வேண்டும்?
Updated on
1 min read

நாம் குடியிருக்கும் வீட்டில் பூஜை அறையை எங்கு வைக்க வேண்டும்,  அதனால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி பார்ப்போம்.

பூஜை அறை வைக்கச் சிறந்த இடம் எது?
நாம் குடியிருக்கும் வீட்டில் இப்போதெல்லாம் பூஜையறை என்றே தனியொரு அறையைக் கட்டி விடுகிறார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் செல்ப், கபோர்டு போன்ற அமைப்புகளை உருவாக்கி அதனுள் பூஜை அறையை வைத்துக் கொள்கிறார்கள். நம்முடைய வீட்டில் பூஜை அறை இருக்க வேண்டிய திசையென்றால் அது,

* தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு நடுப்பகுதி, மேற்கு நடுப்பகுதி

இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை வரவேண்டும். இந்தப் பகுதியில் வரக்கூடிய பூஜையறையினால் மட்டுமே பலபல நன்மைகள் வந்து சேரும்.

பூஜையறை வரக்கூடாத இடங்களும் அதன் தீமைகளும்
நாம் குடியிருக்கும் வீட்டில் எங்குப் பூஜையறை வரவேண்டும் என்று மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தைத் தவிர வேறு எங்கு வந்தாலும் அது வீட்டிற்கு கேடுபலன்களையே உண்டாக்கும்.

வடகிழக்கு பூஜையறை
வடகிழக்கு பூஜையறை மிக மிகத் தவறு. அதனுடைய கெடுதலான பலன் அனைத்தும் வீட்டின் ஆண்கள் மீதே இருக்கும்.

• ஆண்கள் நல்ல வேலைக்குப் போகமுடியாத நிலை ஏற்படும். சில சமயம் ஆண்களுக்கு வேலையே அமையாமல் கூட போக நேரிடும்.

• குடும்ப உறவுகளில் பிரிவினை ஏற்படும். அதாவது தந்தை, மகன் உறவு பாதிப்பு, கணவன் மனைவி உறவு கூட சிலநேரங்களில் பாதிக்கப்படுகிறது.

• உடல் நிலை பாதிப்பு, விபத்து போன்றவை கூட ஏற்பட வாய்ப்புண்டு.

இதுபோல இன்னும் நிறையப் பாதிப்புகள் உண்டு. கவனம் தேவை.

தென்மேற்கு பூஜையறை
தென்மேற்கு பூஜையறை என்பது தவறான அமைப்பாகும். இங்குப் பூஜையறை வந்தால் ஆண்கள், பெண்கள் இருவருமே பாதிப்புக்குள்ளாவார்கள்.

• வியாபாரத்தில் நஷ்டம் அல்லது வியாபாரம் தொடர்ந்து செய்ய முடியாமல் போவது.

• கடன் சுமை

• கொடுக்கல் வாங்கலில் சிக்கல்

• கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்படுதல்

• விவாகரத்து

• வெளியூர் அல்லது வெளிநாட்டிலேயே கணவன் தங்கிவிடுவது

• பில்லி, சூனியம், செய்வினை மீது தேவையற்ற நம்பிக்கை

• தன்னுடைய சொத்தை அல்லது தன்னுடைய முழு வருமானத்தைக் கோயிலுக்கோ, மடத்துக்கோ எழுதி வைப்பது போன்றவை நடக்க நேரிடும்.

வீட்டில் பூஜையறை அமைக்கும் முன்பு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் ஆலோசனைக்குப் பிறகு வைப்பது சிறப்பு. நாம் வணங்கும் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கையில் தான் பூஜையறைக்கு முக்கியத்துவம் தருகிறோம். ஆனால், பூஜையறை அதற்குரிய இடத்தில் இருந்தால் தானே அதன் பிரதிபலிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைக்கு காரணம் தவறான இடத்தில் பூஜையறையை அமைப்பதை அவர்கள் அறிந்திராததே ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com