இந்துமத அற்புதங்கள் 52: தங்கமாய் மாறிய செங்கல்

இந்துமத அற்புதங்கள் 52: தங்கமாய் மாறிய செங்கல்

திருப்புகலூர் என்னும் திருத்தலத்திற்குச் சென்றார் சுந்தரர். அப்போது அவருக்குப் பொருள் தேவையாய் இருந்தது.

திருப்புகலூர் என்னும் திருத்தலத்திற்குச் சென்றார் சுந்தரர். அப்போது அவருக்குப் பொருள் தேவையாய் இருந்தது. திருப்புகலூர் திருக்கோயிலுக்குள் சென்று இறைவனை வணங்கி வழிபட்டார். அவர் கேட்ட பொருளை உடனே இறைவன் தரவில்லை. மனம் லேசாக வருந்தியது. இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டு பக்கத்திலுள்ள திரு மடத்திற்குச் செல்ல நினைத்தார். ஏனோ அப்படிப் போக மனம் வரவில்லை.

திருக்கோயிலின் முன்வாயில் மண்டபத்திலேயே உட்கார்ந்து கொண்டார். அவ்வாறு உட்கார்ந்திருக்கும்போதே தூக்கம் வந்தது. மண்டபத்திலேயே மேலாடையை விரித்துப் படுக்க ஆயத்தம் செய்தார். தலைக்கு வாகாகத் தலையணை? சுற்றும் முற்றும் பார்த்தவர், திருப்பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்களைக் கண்டார். செங்கற்களை எடுத்துத் தலையணையாக வைத்துக்கொண்டு தூங்கிப் போனார்.

சிறிது நேரம் கழித்துத் துயில் கலைந்தது. எழுந்து பார்த்தால்... என்ன வியப்பு! என்ன வியப்பு! தலைக்கு வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொன் கட்டிகளாக மாறியிருந்தன.

திருக்கோயிலுக்குள் சென்ற சுந்தரர், சிவபெருமானைப் பதிகம் பாடித் துதித்தார். திருப்புகலூரில் பொன்கட்டிகளைக் கண்டு சுந்தரர் பாடிய பதிகம்

"தம்மையேபுகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதேஎந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்
இம்மையேதரும் சோறுங்கூறையும்
ஏத்தலாம்இடர் கெடலுமாம்
அம்மையேசிவ லோகம்ஆள்வதற்கு
யாதும்ஐயுற வில்லையே''.

திருப்புகலூர் தலத்தினைச் சென்றடையும் வழி: நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலை அடையலாம். கோயிலின் முன்னால் வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளது. எதிரில் சிவாகம தேவார பாடசாலை உள்ளது.

இறைவன் - அக்னிபுரீஸ்வரர், சரண்யபுரீசுவரர், கோணப்பிரான், இறைவி - சூளிகாம்பாள், கருந்தார்குழலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com