திருமணத் தடைக்கு கிரகங்கள் காரணமா?

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர் என்று கூறுவர். சிலருக்குத் திருமணம் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
திருமணத் தடைக்கு கிரகங்கள் காரணமா?
Published on
Updated on
1 min read

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர் என்று கூறுவர். சிலருக்குத் திருமணம் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதற்கு ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகளும் காரணமாக இருக்கலாம். ஜாதகத்தில் கிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தால் திருமணத் தடை ஏற்படுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

• திருமணத் தடை ஏற்படக் காரணம் ஜாதகத்தில் குடும்பஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்தில் நீச்சம் பெற்ற கிரகங்கள் அமரும்போது ஏற்படுகிறது. களத்திர ஸ்தானாதிபதி எனும் 7-க்குடையவன் நீச்சம் பெற்றால் திருமணம் அமையக் கால தாமதம் ஏற்படுகிறது.

• 7-ல் நீச்சம் அல்லது வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தாலும் திருமணம் அமையத் தடை ஏற்படுகிறது. களத்திரக்காரகன் சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து அசுபர் பார்வை பெற்றால் திருமணம் தாமதமாகும்.

• 7-ம் பாவத்திற்கோ, 7-ம் அதிபதிக்கோ சனி சேர்க்கை அல்லது பார்வை கிட்டினால் இல்லறம் அமையத் தடை ஏற்படுகிறது. 7-ம் அதிபதியோடு ராகு கேது சேர்க்கை ஏற்பட்டால் திருமணம் தாமதமாகிறது.

• சுக்கிரன் நீச்சம் பெற்று சனி செவ்வாய் பார்வை சேர்க்கை பெற்றாலும், சனி செவ்வாய் 7ல் இருந்து, சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் மறைவு பெற்றாலும் திருமணம் நடைபெற கால தாமதம் ஆகிறது. 7-ம் அதிபதி சூரியனோடு சேர்ந்து அஸ்தமனம் பெற்றாலும் திருமணத் தடை உண்டாகிறது. 7-ம் அதிபதி நவாம்ச லக்னத்திற்கு 12ல் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.

• குரு, சுக்கிரன், சூரியன் இவர்களில் ஒருவர் 1ல் இருந்து சனி, 12ல் இருப்பதும் திருமணத் தடைக்கு காரணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com