செவ்வாய், வெள்ளியில் நாம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? 

வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும், ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமையும் வீட்டில் நாம் என்ன செய்யலாம், எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம். 
செவ்வாய், வெள்ளியில் நாம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? 
Published on
Updated on
1 min read

வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும், ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமையும் வீட்டில் நாம் என்ன செய்யலாம், எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம். 

உலகில் மனிதராய் பிறந்த அனைவரும் உதவி செய்யவே விரும்புகிறார்கள். இருப்பினும் சிலர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்க மறுக்கிறார்கள். ஏன்? அப்படிக் கொடுத்தால் என்ன நேரும்? 

செவ்வாய் முருகனுக்கும், வெள்ளி லட்சுமிக்கும் உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்குச் செல்வ வளத்தைக் கொடுப்பதுடன், அவை நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறார்கள். இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து கடன் கொடுப்பதைக் கூடுமானவரை தவிர்க்கலாம். 

அவ்வாறு செய்யும் போது, நம்மிடம் இருக்கும் அனைத்துச் செல்வ வளங்களும் நம்மை விட்டுச் சென்று விடுவதாக ஐதீகம். மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, இந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை பூஜிக்கலாம். 

அன்றைய தினங்களில் என்னென்ன செய்யலாம்? 

* செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். 

* அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து. படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்களை வளர்க்கலாம்.

* சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், கோ ஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

அன்றைய தினங்களில் எதையெல்லாம் தவிர்க்கலாம்...

• ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசற்படியில் நின்று கொடுக்கக்கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசற்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி
வாங்க வேண்டும்.

• குத்து விளக்கைத் தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

• வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் இவற்றில் உட்காரக்கூடாது.

• இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

• விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

• ஈரத்துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com