எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்?

நாம் நினைத்த காரியம் நிறைவேறவும், நமக்கு இருக்கும் பிரச்னைகள் தீரவும் அதற்கேற்ற தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்?
Published on
Updated on
1 min read

நாம் நினைத்த காரியம் நிறைவேறவும், நமக்கு இருக்கும் பிரச்னைகள் தீரவும் அதற்கேற்ற தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். ஆகையால் எந்தத் தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

• விக்னங்கள், இடையூறுகள் நீங்க விநாயகப் பெருமானை வணங்கலாம். 

• வீட்டில் செல்வம் சேர ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீநாராயணரை வணங்கலாம். 

• அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற சிவபெருமானுக்கு உகந்த சிவஸ்துதியை துதிக்கலாம். 

• கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்கலாம். 

• திருமணத் தடை நீங்க ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை அம்மனை வழிபடலாம். 

•  மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரியை வழிபடலாம். 

• புத்திர பாக்கியம் பெற சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமியை ஆராதிக்கலாம். 

• புதிய தொழில் துவங்க ஸ்ரீ கஜலட்சுமியை வணங்கலாம். 

• தொழில் சிறந்து லாபம் பெற திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடலாம். 

• வீடும், நிலம் பெற ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவானை வணங்கலாம். 

• பில்லி, சூனியம், செய்வினை அகல ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மரை வழிபடலாம். 

• நோய் தீர ஸ்ரீதன்வந்தரி, தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். 

• ஆயுள், ஆரோக்கியம் பெற ருத்திரனை வழிபடலாம். 

• மனவலிமை, உடல் வலிமை பெற  ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயரை வழிபடலாம். 

• விவசாயம் தழைக்க  ஸ்ரீ தான்யலட்சுமியை வணங்கலாம். 

• உணவுக் கஷ்டம் நீங்க  ஸ்ரீ அன்னபூரணியை வழிபடலாம். 

• பகைவர் தொல்லை நீங்க திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com