சுப நிகழ்ச்சிகளின் போது ஆரத்தி எடுப்பது ஏன்?

தமிழர்களின் ஒவ்வொரு சுப சடங்குகளிலும் ஆரத்தி எடுப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.
சுப நிகழ்ச்சிகளின் போது ஆரத்தி எடுப்பது ஏன்?
Published on
Updated on
1 min read

தமிழர்களின் ஒவ்வொரு சுப சடங்குகளிலும் ஆரத்தி எடுப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை ஆரத்தி எடுக்கும் முறை தொடர்கிறது. ஆரத்தி கண் திருஷ்டியை போக்க எடுக்கப்படுகிறது என நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

பொதுவாக நாம் முக்கிய சுப நிகழ்ச்சிகளில் மட்டுமே ஆரத்தி எடுக்கிறோம். தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இந்த சம்பிரதாயத்தின் முக்கிய நோக்கமே, யாருக்கு ஆரத்தி எடுக்கிறோமோ அவருக்கு லட்சுமி, சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் என்பதே. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் (லட்சுமி) சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு (சரஸ்வதி) சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு தட்டில் எடுத்து அதற்கு தீச்சுடர் ஏற்றி சம்பந்தப்பட்ட நபரின் உடலை மூன்று முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஆரத்தி எடுக்க காரணம் என்ன?
மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு. இது உடலிலுள்ள விஷ அணுக்களை அழிக்கிறது. ஆரத்தியை சுற்றிய பின்னர் அந்த ஆரத்தி நீரை வடக்கு பக்கமாகக் கொட்டிவிடவேண்டும். யார் காலிலும் படாதபடி ஏதேனும் செடிக்கு ஊற்றினாலும் சரிதான்.

வாசலில் ஆரத்தி எடுப்பது ஏன்?
உடலில் கிருமிகள் அண்டியிருக்கும் நிலையில், வீட்டுக்குள் வரும்போது அது வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை எளிதில் தொற்றிக்கொள்ளும். இது அவர்களுக்கு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. அதனால் தான் வாசலிலேயே ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com