எந்த ராசிக்காரர்கள் எந்தத் திதியில் கவனமாக இருக்க வேண்டும்? 

நல்ல காரியங்கள் செய்யவும், சுப காரியங்கள் செய்யவும் திதிகளை பார்க்கின்றனர்.
எந்த ராசிக்காரர்கள் எந்தத் திதியில் கவனமாக இருக்க வேண்டும்? 
Updated on
1 min read

திதி என்பது சந்திரனின் நாளாகும். மொத்தம் முப்பது திதிகள் உண்டு. அமாவாசையை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் வளர் பிறை இதை சுக்லபட்சம் என்றும், பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை காலமாகும். இதைக் கிருஷ்ண பட்சம் என்றும் கூறுவர். 

நல்ல காரியங்கள் செய்யவும், சுப காரியங்கள் செய்யவும் திதிகளை பார்க்கின்றனர். ஆனால் இந்தத் திதிகள் சில ராசிகளைப் பாதிக்கின்றது. அதன்படி எந்த இராசிக்காரர்கள் எந்தத் திதியன்று கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். 

இராசிகளும் கவனமாக இருக்க வேண்டிய திதிகளும் 

மேஷம் - சஷ்டி

ரிஷபம் - சதுர்த்தி, திரயோதசி

மிதுனம் - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

கடகம் - சப்தமி

சிம்மம் - திருதியை, சஷ்டி, நவமி, தசமி, திரயோதசி

கன்னி - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

துலாம் - பிரதமை, துவாதசி

விருச்சிகம் - நவமி, தசமி

தனுசு - துவிதியை, ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி

மகரம் - பிரதமை, திருதியை, துவாதசி

கும்பம் - சதுர்த்தி

மீனம் - துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி

இந்த வளர்பிறை, தேய்பிறை திதிகளில் மேற்கூறியபடி இராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும். இந்த நாட்களில் மற்றவர்களிடம் பழகும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும். இவைகள் அனைத்தும் ஜோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன.

வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய்பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com