மகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி?

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகாசிவராத்திரி தான். அதனால்தான் மகாசிவராத்திரியன்று நாம் சிவபெருமானை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் விலகும் என்கின்றனர்
மகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி?
Published on
Updated on
1 min read

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகாசிவராத்திரி தான். அதனால்தான் மகாசிவராத்திரியன்று நாம் சிவபெருமானை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் விலகும் என்கின்றனர். மகாசிவராத்திரியன்று எவ்வாறு விரதம் இருப்பதெப்படி? விரதம் இருப்பதால் ஏற்படும் பலன் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.

• சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைப்பிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும்
அளிப்பார் என்பது ஐதீகம்.

• மனிதர்களுக்கு மிகவும்  முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தியாகும்.

• மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்று ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விரதத்தை 24 அல்லது 12 வருடங்களாவது மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாழ்வில் அனைத்து வளமும் வந்து சேரும்.

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். இதைத்தொடர்ந்து, சிவன் கோயிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.

ஜையின் போது சிவாய நம என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோ சக்தியை கொடுக்கும். பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச் சிறந்த பலனை தரும். அன்றைய தினம் இரவில் உறங்காமல், நான்கு வேளையும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப்பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைப்பிடிப்பது, நூறு அசுவமேதயாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதற்கு ஈடாகாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com