இன்று விரதமிருப்பவர்கள் உப்பில்லாமல் சாப்பிட வேண்டுமாம் ஏன்?

27 நட்சத்திரங்களில் ஒன்றான திருவோணம் நட்சத்திரம் பெருமாளுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
இன்று விரதமிருப்பவர்கள் உப்பில்லாமல் சாப்பிட வேண்டுமாம் ஏன்?
Published on
Updated on
1 min read

27 நட்சத்திரங்களில் ஒன்றான திருவோணம் நட்சத்திரம் பெருமாளுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களான தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருவோண விரதத்தின் வரலாறு

மிருகண்ட மகரிஷியின் புத்திரனான மார்கண்டேய மகரிஷி பூமாதேவி மகளாகவும் திருமால் மாப்பிள்ளையாகவும் ஆக வேண்டும் என கடும் தவம் செய்தார். அதன் விளைவாகத் துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தையைக் கண்டு வியந்து எடுத்து அதற்கு பூமாவி எனப் பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்தாள் பூமாதேவி. அவதார நோக்கம் நிறைவேறும் காலம் வந்தது. 

ஒருநாள் திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்கண்டேயர் குடிலுக்கு வந்து, பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி கேட்டார். ஏதேதோ காரணம் 

கூறியும் கேட்கவில்லை. மார்கண்டேயரோ தன் மகளுக்கு உப்பு போட்டு சமைக்க தெரியாது எனக் கூறினார். விட்டாரா திருமால் இல்லை. செய்வதறியாது கண்மூடி பெருமாளை வேண்டி கண் திறந்தபோது உப்பிலியப்பனே முன் தோன்றி உன்னிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்தார். அதன்பின் பூமாதேவியை மகிழ்ச்சியுடன் பெருமாளுக்கு மணம் முடித்து வைத்தார் மார்கண்டே மகரிஷி. 

பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்று பெயர் வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 

திருவிண்ணகர் எனப்படும் ஒப்பிலியப்பன் கோயிலில் குடிகொண்டிருக்கும் உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால், இன்றும் உப்பில்லாத திருவமுதையே பெருமாளுக்கு நிவேதனமாகப் படைத்து வருகின்றனர். 

மாதாமாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். அன்றைய தினம் பெருமாளுக்கு உபவாசம் இருப்பவர்கள் உப்பின்றி சமைத்து விரதம் இருக்கின்றன. மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் வேண்டியது நிறைவேறும் என்பது திண்ணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com