மாசி மாதத்தில் அப்படியென்ன சிறப்பு? 

மாதங்களில் மகத்தான மாதம் என்ற அழைக்கப்படுவது மாசி. உபநயனம், வேதம் கற்றுக் கொள்ளுதல்,
மாசி மாதத்தில் அப்படியென்ன சிறப்பு? 
Published on
Updated on
1 min read


மாதங்களில் மகத்தான மாதம் என்ற அழைக்கப்படுவது மாசி. உபநயனம், வேதம் கற்றுக் கொள்ளுதல், கலைகளைக் கற்றறிதல், முதலான விஷயங்களுக்கான அற்புதமான மாதம் மாசி. இந்த மாதத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்பதைப் பார்ப்போம். 

மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்தக் காரியமும் இரட்டிப்புப் பலன்கள் தரும். மாசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். 

மாசி 2 - திருவோணம் 
பெருமாளுக்கு உகந்த - திருவோண விரதம். இதனை சிரவண விரதம் என்றும் கூறுவார்கள். மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று நாராயணனை வழிபட்டு விரதம் இருப்பதுதான் சிரவண விரதம்!

மாசி 3 - அமாவாசை
மாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில், முன்னோர் ஆராதனையை மறக்காமல் செய்வோம். தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, பித்ருக்களின் ஆசியைப் பெறுவோம்!

மாசி 4 - பிரதமை
பிரதமை திதி விரதம் மிகவும் உத்தமமானது. அமாவாசைக்கு மறுநாளிலோ, அல்லது பௌர்ணமிக்கு மறுநாளிலோ பிரதமை திதியில் செய்யப்படும் விரதங்கள் சில உள்ளன. மாசி மாதத்தில் வரும் பிரதமை திதி மிகவும் உத்தமமானது.

மாசி 5 - சந்திர தரிசனம்
மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

மாசி 17 - பௌர்ணமி, மாசிமகம்
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் இருக்க, சூரியன் கும்ப ராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருப்பதான சேர்க்கை நடைபெறும். இந்தச் சேர்க்கை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது.

மாசிமகம் நீர்நிலைகளின் மேன்மையை மக்களுக்குப் போதிக்கிறது. எனவேதான் இறைவடிவங்களை நீர்நிலைகளில் தீர்த்தவாரியாடச் செய்வதோடு மக்களும் புனிதநீராடி மகிழ்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com