கடன் தொல்லை தீர்க்கும் செவ்வாய் அஷ்டமி விரதம்!

தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். செவ்வாய்க்கிழமையில்...
கடன் தொல்லை தீர்க்கும் செவ்வாய் அஷ்டமி விரதம்!
Published on
Updated on
1 min read

தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். செவ்வாய்க்கிழமையில் வரும் அஷ்டமி அன்று பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும், மனம் அமைதியோடும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும்.

பொதுவாக அஷ்டமியில் பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது என்றாலும், அந்த அஷ்டமி தினம் செவ்வாய்க்கிழமையில் வருவது கூடுதல் பலனைத் தரும். அன்றைய தினம் பைரவரை வழிபாடு செய்தால் கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்.

மேலும், சிவப்பு நிற ஆடை சாத்தி, சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி, வெல்லம் கலந்த பாயசம், உளுந்து வடை, பால், தேன், பழம் நிவேதனம் செய்து, வெள்ளை பூசனிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல யோகங்களும் வந்து சேரும்.

இதேபோல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com