
துலா லக்கினம்:
ஜாதகத்தில் அடிப்படை வேர் - கன்னி லக்கின (6-11-2019) தொடர்ச்சியாக இன்று வானமண்டலத்தில் 7வது கட்டமான துலா லக்னம் பற்றிப் பார்ப்போம்.
இந்த லக்கினத்தை ஆளும் கிரகம் என்கிற களத்திர காரகன் சுக்கிரன் ஆவார். அவரே அஷ்டமாதிபதியாகவும் வருகிறார். காலபுருஷனுக்கு 7வது திருமணத்திற்குறிய பாவம் அங்கு தான் களத்திர காரகன் ஆட்சி புரியும் இடம்.
துலா ராசியில் உள்ள சின்னம் நீதிக்குரிய தராசு அங்கு தான் நீதியை நிலைநாட்டும் சனி உச்சம் பெறுகிறார். இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது நீதியுடன் கர்மாவை திறம் பெற செய்ப்பவன் அந்த ஜாதகர் சுக்கிர சுப திசையே எப்பொழுதும் நடைபெறும். ஆனால், இவர்களிடம் உள்ள பணம், பொருள் வைத்து வைத்து பெருமிதம் கொள்ளக்கூடாது.
இந்த லக்கினக்காரர்கள் நீதியுடன் அனைத்து வேலையும் சத்தம் இல்லாமல் செய்வது நன்று. சனி என்பவர் உதவியால் துலா லக்கினகாரர்களுக்கு அவரவர் உழைப்பால் பொன்னும் பொருளும் கிட்டும். பாதகாதிபதியான சூரியன் இங்கு நீச்சம் பெறுகிறார். இந்த லக்கின காரர்களுக்கு யோகத்தை தருபவர் சுக்கிரன், சனி, புதன், முக்கியமாக புதனும் சந்திரன் ஒன்றாக கேந்திர, திரிகோணங்களில் சேர்க்கை பெற்றால் ராஜயோகத்தை தருவார்கள்.
யோகப்பலனை தடுப்பவர் என்றால் சூரியன், குரு, மாரகமான செயல்களை தரவல்லவர் செவ்வாய் ஆவார். துலா கக்கினக்காரர்களுக்கு குரு, சூரியன், செவ்வாய் ஜாதகரின் தசாபுத்திகளங்களில் கொஞ்சம் பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். இது ஒரு காற்று, ஆண் மற்றும் சர ராசி ஆகும்.
கூறினேன் கோலுட யில்லு மாகில்
கொற்றவனே கதிரவனும் கோணமேற
சீரின் சென்மனுக்கு யோகம்மெத்த
சிவசிவா சிவபதவி கிட்டும் செப்பு
மாறினேன் மற்றவிடந் தன்னில்நிற்க
மார்த்தாண்டன் திசையுமது ஆகாதப்பா
தேரினேன் போகருட கடாக்ஷத்தாலே
திடமான புலிப்பாணி தெரிவித்தேனே - புலிப்பாணி
இந்த துலாம் லக்கினத்திற்குத் திரிகோண ஸ்தானமான 1,5,9-ல் சூரியன் நிற்கப் பிறந்தஜாதகணுக்கு மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் பேரருளால்கிட்டும் என்பதையும் திடமாகக் கூறுவாயாக வேறு இடங்களில் மாறி நிற்பின் அவனது திசாபுத்திகள் மிகவும் தொல்லை தருவனவேயாகும். இதுவே என் குருநாதர் போகரது அருட்கருணை கொண்டு திடமாக நான் அறிந்து கொண்ட காரணத்தால் நீ தேர்ச்சி பெறஎடுத்துச் சொன்னேன். இப்பாடலில் துலாம் இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விளக்குகிறார்.
துலா லக்கினத்தில் சுக்கிரன் அதிபதி அவருடைய திசையில் போதகனாக குருவும், வேதகனாக சனியும், பாசகனாக புதனும், காரகனான சூரியனும் வருவார்கள். சுக்கிரன் என்பவர் தேவ குருவின் வீடான மீனத்தில் உச்சமும், பனிரெண்டாம் வீடான கன்னியில் நீச்சமும் பெறுகிறார். இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரனின் சரியான இடத்தில் இருந்தால் அவர்களுக்கு இன்பத்திரும் தேவையான அனைத்து சுகங்கள், செல்வமும், நல்ல மனைவியும் குடும்பமும் கிட்டும் என்பது உண்மை.
சுக்கிரன் என்பவர் களத்திரம், கட்டிய வீடு, வாகனம், நல்ல கூட்டாளி, பொண்ணும், பொருளும், வைரம் வெள்ளி கிட்டும், கலையில் ஆர்வம், கேளிக்கை, காமம், இசையில் ஆர்வம் என்று இவரின் ஆசையை அதிகப்படுத்தும் தன்மை சுக்கிரனுக்கு உண்டு. அதுதவிர இவர் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் தன்மை கொண்டவர்.
துலா லக்கினகாரர்கள் வசீகர தோற்றம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு மரியாதையை கொடுப்பவர்கள், இனிமையான குரல் கொண்டவர்கள், பேராசை கொஞ்சம் வெளிப்படும், சகோதரர்கள் நண்பர்களால் சந்தோஷம் அடைவார்கள். குழந்தைகள் மேலுயர உதவர்கள், சந்தோஷம் துக்கம் சேர்ந்து இருக்கும், கடன் இருந்துகொண்டு இருக்கும், அமைதியானவர்கள், கலையிலும் இசையிலும் மிகுந்த ஆர்வமும், முயற்சியால் முன்னுக்கு வருபவர், வேலை மாற்றம் இருந்துகொண்டு இருக்கும், படிப்பு வைத்திய செலவு அவ்வப்பொழுது ஏற்படும், பயணம் இவர்களின் பொழுதுபோக்கு, புத்திசாலி மிக்கவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் எடைபோட்டு பழகுவார்கள், அழகிய கவர்ச்சியானவர்கள், வெற்றியாளர்கள், அரசாங்கத்தால் அவ்வளவு நன்மை பெறமாட்டார்கள், சர்க்கரை நோய் மற்றும் வயிறுக்குக் கீழ் உள்ள கருப்பை, சுக்கிலம் குறைபாடு சிலருக்கு ஏற்படும்.
இந்த லக்கினத்தில் செவ்வாய் நட்சத்திரங்களான சித்திரை 1,2, ராகு சாரத்தை கொண்ட ஸ்வாதி, மற்றும் குருவின் சாரம் கொண்ட விசாகம் 1,2,3 அடங்கும். எந்தெந்த நட்சத்திரத்தில் லக்கின புள்ளி அமையப்பெற்றால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.
சித்திரை: புகழும் ஆற்றலுமிக்கவர்கள், திறமைசாலிகள், மற்றவர் குணமறிந்து நடப்பவர்கள், வெற்றியாளர்கள், தைரியசாலி, செல்வமிக்கவர், பரந்த நல்ல நோக்கமும் கொண்டவர்கள், மெய்யறிவாளிகள், அறநெறியில் வாழ்க்கை நடத்துபவர்கள், எதிர்த்துவரும் பகையாளிகளை பணிய வைத்திடுவார்கள், தன்மானம் இவர்கள் உயிர் நாடி.
சுவாதி: கல்வியாளன், அஞ்சா நெஞ்சம் கொண்டவன், சாந்தசொருபி, முன் கோபி, பேச்சில் இனிமை, தேவ கணம் கொண்டவர்கள், ரகசியமிக்கவர், கோபத்தை வெளிகாட்டமாட்டான், ஒருசிலர் காமமிக்கவர், மற்றவர்கள் நோக்கமறிந்து நடப்பவர், குறிக்கோள் மிக்கவர்கள், மற்றவர்களை சந்தோஷத்தப்படுத்துபவர்கள், நற்குணமும் கொண்டவர், நற்செயல் செய்பவர், பெரிய மனித சகவாசம் உண்டு, திட தேகம் கொண்டவர்கள், நேர்மை மிக்கவர், பன்மடங்கு யோசனை மற்றும் செயல் இருக்கும், கலக்கமிக்கவர், ஒரு சிலருக்கு திருட்டுத்தனம் மற்ற கெட்ட எண்ணம் இருக்கும், கௌரவத்தை உண்டுபண்ணுவார்கள்.
விசாகம்: வாய்மையாளன், புத்திமான், விகடகவி, வியாபாரி, கல்வியால் ஊக்கமிக்கவர், ஜோதிட சாஸ்திரம் கொஞ்சம் தெரியும், வியாதியஸ்தன், தர்மநெறி நடப்பவன், இடம் பொருள் ஏவல் நடப்பான், சங்கீத ஞானம் இருக்கும், கபடதாரி, புகழ்ச்சி இவர்களுக்கு பிடிக்கும், களிப்புடையவன், சூழ்ச்சி மிக்கவன், தன்னை பற்றி உயர்த்தி பேசுபவன், ஏமாற்றும் குணமுண்டு, திறமைசாலிகள், சாதிக்க முயற்சிப்பவர்கள்.
மேற்கொண்ட அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும். இவற்றில் எந்ததெந்த கிரகம் சேர்க்கை பார்வை பெற்றிருக்கிறது என்று பார்க்கவேண்டும். ஜாதகருக்கு அவரவர் ஜெனன ஜாதக கட்டமும் தசை புத்தியும் துலா லக்கினத்திற்கு ஏற்ப கிரங்கங்களால் நல்லது கெட்டதும் என்று அதற்கேற்ப அதற்குரிய கிரங்கள் ஆட்சி, உச்சம், மறைவு பெற்றால் நன்மைகள் கிட்டும்.
குருவே சரணம்
- ஜோதிட சிரோன்மணி தேவி
Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.