குபேர பொம்மையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம்?

பொதுவாக குபேரன் பொம்மையை வீட்டின் எந்த திசையில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
குபேர பொம்மையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம்?
Published on
Updated on
1 min read


பொதுவாக குபேரன் பொம்மையை வீட்டின் எந்த திசையில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் குபேர பொம்மையைக் கடவுளாக வணங்கி வருகின்றனர். இந்த பொம்மையின் உண்மை பெயர் சிரிக்கும் புத்தர்.

குபேர பொம்மையை சிலர் அலங்காரத்திற்காக வீட்டில் வைத்திருப்பர். சிலர் கடவுளாக குபேர பொம்மையினை பூஜை அறையில் வடகிழக்கு திசையில் வைத்து வழிபடுவர். 

வீட்டில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரவும், துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்கவும் குபேரன் பொம்மையை வைப்பதாக சொல்லப்படுகிறது. சிரிக்கும் குபேரன் பொம்மையின் மகிழ்ச்சியான தோற்றமானது நமக்குள் இருக்கும் மனஅழுத்தத்தை போக்கி சந்தோஷத்தைத் தரும்.

குபேரன் பொம்மையை எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் என்று தெரிந்துகொள்வோம். 

குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற பிரச்னைகள் தீரவும், நேர்மறை ஆற்றல் வீட்டில் உருவாகாமல் இருக்கவும் வீட்டின் கிழக்கு திசையில் சிரிக்கும் குபேர பொம்மையை வைக்கலாம். இவ்வாறு வைப்பதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷமும், ஒற்றுமையும் நிலவும். 

குபேரன் சிலையைப் படுக்கையறை அல்லது உணவருந்தும் இடத்தின் தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். வீட்டின் வருமானம் இரட்டிப்பாகும். 

வேலை செய்யும் இடத்தில் மேஜையின் மீது வைத்தால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படாது. 

மாணவர்கள் படிக்கும் மேஜையின் மீது குபேர பொம்மையை வைத்தால் கல்வித்திறன் பளிச்சிடும். கவனச்சிதறல் ஏற்படாது. 

சாதாரண ஒரு பொம்மைக்கு எப்படி இவ்வளவு சக்தி என்று நீங்கள் கேட்கலாம்? 

அதற்கு முழு காரணம் அந்த பொம்மையின் வடிவமைப்பே. எப்பொழுதும் சிரித்துக்கொண்டிருக்கும் இந்த பொம்மையை நாம் பார்க்கும்போது நமக்கு தெரியாமலே நமக்குள் ஒரு ஆனந்தம் வரும். இதனால் மன அழுத்தம் குறையும். இதுவே இந்த பொம்மையில் உள்ள அற்புத சக்தியின் ரகசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com