
வார பலன்கள் (செப். 6 - செப். 12)
12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (டிசம்பர் 13 - டிசம்பர் 19) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். உடன்பிறந்தோருக்கு உதவிகள் செய்து மகிழ்வீர்கள். கௌரவம், அந்தஸ்து கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்படுமாகையால் கவனத்துடன் இருக்கவும்.
உத்தியோகஸ்தர்கள் தங்களுக்குக் கொடுத்த வேலைகளைச் சரிவரச் செய்து நற்பெயரை எடுக்கவும். சம்பந்தமில்லாத வேலைகளில் மூக்கை நுழைக்க வேண்டாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சமநிலையை காண்பார்கள். கூட்டாளிகளை நம்பி, எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் குறைய வாய்ப்புள்ளதால் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும்.
அரசியல்வாதிகள் அவசரப்பட்டு எதையும் பேசி மாட்டிக் கொள்ள வேண்டாம். கட்சி மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நலம். சிலர் புதிய பொறுப்புகள் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.
பெண்மணிகள் கணவரோடு ஒற்றுமையுடன் பழகுவார்கள். காரணமில்லாமல் மனதில் சற்று அமைதி குறையும். மாணவமணிகளுக்கு உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டு பின்பு நிலைமை சரியாகிவிடும்.
பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை சாற்றி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 13, 14.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
வரவுக்கு ஏற்ற செலவுகள் செய்ய நேரிடும். வழக்கில் சாதகமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோர் வகையில் இருந்த பிணக்குகள் அகன்று சுமுகமான சூழல் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வேலைகளில் குறைகாணக் காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வந்து சேரும். மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தை பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். பணிகளில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் பின்பு சாதகமாக முடியும்.
அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு எதிரிகள் முட்டுக்கட்டை போடுவார்கள். சாதுர்யத்துடன் அவர்களுக்குப் பதிலடி கொடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
பெண்மணிகள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவரிடம் சிறிது மனஸ்தாபம் ஏற்பட்டு மறையும். உற்றார் உறவினர்களிடம் பாசத்துடன் பழகவும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். காலநேரத்தை வீணாக்காமல் படிக்கவும்.
பரிகாரம்: மகான்களைத் தரிசிக்கவும். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யவும்.
அனுகூலமான தினங்கள்: 14, 15.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
திட்டமிட்ட வேலைகளைத் தைரியத்துடன் செய்து முடித்து விடுவீர்கள். தடைகள் அகலும். இருப்பினும் மனதிலும் உடலிலும் சோர்வு காணப்படும். பொருளாதா நிலை மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது.
உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட பணிகளை உடனுக்குடன் செய்யாமல் காலதாமதமாக்கி முடிப்பீர்கள். சோம்பலை விட்டொழித்து சுறுசுறுப்புடன் செயல்படுங்கள். வியாபாரிகள் சிலநேரங்களில் அதிக லாபம் எதிர்பார்க்காதீர்கள். பொருளாதார நிலைமையை மேம்படுத்திக் கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கொள் முதலில் லாபங்களைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். திட்டங்களைத் தீவிரமாக நிறைவேற்றி, கட்சித் தலைமையின் கவனத்தைக் கவர முயற்சிக்கவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் அரவணைப்பும் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மாணவமணிகளுக்கு நினைத்த பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள். மதிப்பெண்கள் உயரும்.
பரிகாரம்: ஒரு முறை பட்டமங்கலம் சென்று குருபகவானை தரிசித்து வரவும்.
அனுகூலமான தினங்கள்: 13, 15.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
கவலைகள் குறையும். தொழிலில் நிலவிய சோதனை மறையும். உறவினர்களிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்காதீர்கள். சகோதரர்களின் அலட்சியப்போக்கு மன வேதனையை அளிக்கும். அநாவசியச் செலவுகள் செய்யாமல் சிக்கனத்தைக் கையாளவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் நற்சான்றிதழ் பெற சற்று கவனத்துடன் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இடமாற்றத்திற்கான முயற்சிகளும் தற்போது ஒத்துவராது. வியாபாரிகள் கடன் வாங்கும் போது மிகுந்த யோசனையுடன் செயல்படுத்தவும். விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்த அளவு லாபம் தராது. ஆனாலும் பழைய கடன்கள் வசூலாகும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சித் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களின் ரகசிய திட்டங்களைப் புரிந்து கொள்வதற்கு தொண்டர்களும் உதவியாக செயல்படுவார்கள். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்தியாக இருக்கும். ரசிகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பெண்மணிகள் குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். மாணவமணிகள் கல்வியில் அக்கறை செலுத்தவும். விளையாட்டிலும் கவனமுடன் ஈடுபடவும்.
பரிகாரம்: நவக்கிரகங்களைச் சுற்றி வரவும். ஞாயிறன்று சிவபெருமானை தரிசிக்கவும்.
அனுகூலமான தினங்கள்: 14, 16.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். மேலும் வளர்ச்சி அடைவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். சுபச் செய்திகள் தேடிவரும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பைக் கூட்டிக் கொள்ளவும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவுடன் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்வார்கள். அலுவலக வேலை விஷயமாக சிறு பயணங்களைச் செய்ய நேரிடலாம். வியாபாரிகளுக்கு சற்று மந்தமான சூழல் நிலவும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவார்கள். கால்நடை பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் சில சிரமங்கள் உண்டாகும்.
பெண்மணிகளுக்கு சில சந்தோஷமான நிகழ்வுகளால் மனதில் உற்சாகம் பிறக்கும். ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். மாணவமணிகள் சுறுசுறுப்பாகப் படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.
பரிகாரம்: புதனன்று பெருமாள் தரிசனம் உகந்தது.
அனுகூலமான தினங்கள்: 13, 16.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
தொழிலில் அனுகூலமான நிலைமை தென்படும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். உடன்பிறந்தோர் வழியில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பயணங்களால் நன்மை உண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். வியாபாரிகள் புதிய விளம்பர யுக்திகளைப் பயன்படுத்தி வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து சாதகமாக இருப்பதால் விளைச்சல் அதிகமாகி, வருமானம் பெருகும். கால்நடைகள் மூலம் லாபம் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சியில் பொறுப்புகளைப் பெறுவார்கள். எதிரிகள் அடங்கியே இருப்பார்கள். கட்சித் தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள். கலைத்துறையினரின் திறமைகள் அதிகரிக்கும். ஒப்பந்தங்களில் வெற்றி அடைய சில செலவுகளும் செய்வீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் சற்று அக்கறை காட்டவும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரபகவானுக்கு அர்ச்சனை செய்து வரவும்.
அனுகூலமான தினங்கள்: 15, 16.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
மனதில் உற்சாகம் பிறக்கும். ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடும் நிலை உருவாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் பலன் அடைவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் இருந்து வந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவுடன் விரும்பிய இடமாற்றத்தையும் ஊதியத்தையும் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை நல்ல முறையில் இருக்கும். விவசாயிகள் செய்ய நினைத்த வேலைகளைச் செய்து முடிப்பார்கள். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எதிராக கட்சியில் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். போட்டிகளையும் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள், வருமானம் தேடி வரும். பெண்மணிகள் பொருளாதார வளத்தால் திருப்தியடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
மாணவமணிகள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவார்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வார்கள்.
பரிகாரம்: செவ்வாயன்று செந்திலாண்டவரை வணங்கி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 13, 17.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செய்யும் தொழிலில் இடையூறுகள் ஏற்பட்டாலும் விடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நலத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்பட்டு, பிறகு சரியாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களையும் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துங்கள். விவசாயிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். புதிய குத்தகைகள் எடுக்கும்போது கவனத்துடன் செயல்படவும்.
அரசியல்வாதிகள் எவரையும் நம்பி வாக்குக் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. கட்சி மேலிடத்தை அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினர் தம் பெயரைத் தக்க வைக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.
பெண்மணிகள் சுற்றத்தாரிடம் பழகும்போது சற்று விழிப்புடன் இருக்கவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க தியானம் மேற்கொள்ளுங்கள்.
பரிகாரம்: வள்ளி} தேவசேனா சமேத முருகப்பெருமானின் தரிசனம் உகந்தது. அனுகூலமான தினங்கள்: 17, 18. சந்திராஷ்டமம்: 13, 14.
{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை இருக்கும். செயல்களில் நிலவிய தேக்க நிலைமை மாறி முயற்சிகள் வெற்றி பெறும். உடன்பிறந்தோர் வகையில் நிலவிய மனக் கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் முன்னேற்றமடையும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். பணவரவு சீராகவே இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உருவாகும். வியாபாரிகள் பங்குதரகர்களுடன் நிலவி வந்த கசப்புகள் நீங்கி இணக்கங்கள் கூடும். கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக முடியும். விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு குறையும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் சற்று தள்ளியே இருப்பார்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த வரவேற்புகளைப் பெறுவார்கள். வளர்ச்சியடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
பெண்மணிகள் கணவரிடம் எதிர்பார்த்த அன்பு, பாசம் காண்பார்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்.
பரிகாரம்: ராம பக்த அனுமனை வெண்ணெய் சாற்றி வணங்கி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 13, 18.
சந்திராஷ்டமம்: 15, 16.
{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சிறிது கலகலப்பு குறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். சிலருக்கு உத்தியோகப் பிரிவில் மாற்றம், வெளிநாட்டு பயணம் உண்டாகும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் லாபமடைவார்கள். அதிகம் உழைக்க நேரிடும். விவசாயிகள் புதிய பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள். விளைச்சல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் பாராட்டுகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவால் சாதனைகள் செய்வீர்கள். கலைத்துறையினர் சொந்த முயற்சியால் சில முக்கிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள்.
பெண்மணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சிக்கனத்தைக் கையாளவும். மாணவமணிகள் தேர்வில் விரும்பத்தக்க மதிப்பெண்கள் பெறுவீர்கள். பெற்றோர் சொற்படி நடக்கவும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்தும் சனீஸ்வரரை வணங்கியும் வரவும்.
அனுகூலமான தினங்கள்: 14, 16.
சந்திராஷ்டமம்: 17, 18.
{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அறிவும் ஆற்றலும் பளிச்சிடும். தேவையில்லாத சில அலைச்சல்கள் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும்.
உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு உத்தியோகப்பிரிவில் மாற்றமோ, வேறு வேலை மாற்றமோ, வெளிநாடு செல்வதோ ஏற்படும். சக ஊழியர்களிடம் நட்புடன் பழகுவீர்கள். வியாபாரிகள் தங்களின் நெடுநாளையப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார்கள். விவசாயிகள் செலவு குறைவான மாற்றுப்பயிர்களை பயிரிட்டு லாபம் பெறலாம்.
அரசியல்வாதிகள் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். கட்சி மேலிடத்தால் சில சிக்கல்கள் வரலாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். ரசிகர்களிடம் பாராட்டைப் பெறுவார்கள்.
பெண்மணிகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். மாணவமணிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் குறைத்து படிப்பில் அக்கறை செலுத்துங்கள்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை தரிசித்து வரவும்.
அனுகூலமான தினங்கள்: 13, 17.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சகோதர வழியில் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். பணவரவிற்கு தடைகள் ஏற்படும். சிலருக்கு விரும்பிய ஊருக்கே பணி மாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளுக்கான முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். விவசாயிகளுக்கு மகசூலில் லாபத்திற்கு குறைவு இருக்காது. குத்தகைகளை எடுக்க முயற்சிக்கலாம். வருமானம் சீராக இருக்கும்.
அரசியல்வாதிகளைத் தேடி, புதிய பொறுப்புகள் வந்து சேரும். முக்கிய பிரச்னைகளில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும். பெண்மணிகளுக்கு குடும்பத்திலும் நிர்வாகத்திலும் அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள்.
மாணவமணிகள் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடுவீர்கள். முயற்சியுடன் படித்தால் தடைகளை உடைத்து வெற்றிவாகை சூடுவீர்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரரை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 15, 19.
சந்திராஷ்டமம்: இல்லை.