
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.82 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.2.82 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.3.60 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.2.60 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.3.60 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.