சீனிவாசமங்காபுரத்தில் மகா சம்ப்ரோக்ஷண ஏற்பாடுகள் தொடக்கம்

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணத்துக்கான ஏற்பாடுகள் சனிக்கிழமை விமரிசையாகத் தொடங்கின.
சீனிவாசமங்காபுரத்தில் மகா சம்ப்ரோக்ஷண ஏற்பாடுகள் தொடக்கம்

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணத்துக்கான ஏற்பாடுகள் சனிக்கிழமை விமரிசையாகத் தொடங்கின.
 திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் இக்கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், வரும் 13-ஆம் தேதி இவ்விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான வைதீக காரியங்கள் சனிக்கிழமை காலை விமரிசையாகத் தொடங்கின. காலை 8 மணிக்கு கலாகர்ஷணம் நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 41 பட்டாச்சாரியார்கள் வந்து மகாசம்ப்ரோக்ஷண ஏற்பாடுகளில் பங்கேற்றுள்ளனர்.
 யாக குண்டங்களை அமைத்து காலை, இரவு வேளைகளில் வைதீக காரியங்கள் நடைபெற உள்ளன. மகா சம்ப்ரோக்ஷணம் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நடைபெற வேண்டி சனிக்கிழமை மாலை 6.30 முதல் 8.30 மணி வரை மேதினி பூஜை, சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதையொட்டி, கோயிலுக்கு அருகில் உள்ள நந்தவனத்திற்கு அர்ச்சகர்கள் சென்று புற்று மண்ணை எடுத்து வந்து அதில் பூதேவி உருவத்தை வரைந்து அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து மண் எடுத்து அதில் நவதானியங்களை முளைவிட்டனர். இந்த நிகழ்வில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மகா சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு வரும் 13-ஆம் தேதி வரை இக்கோயிலில் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 புதிய வாகனங்கள் நன்கொடை: கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு ஹைதராபாதைச் சேர்ந்த யலமஞ்சி நிதின்குமார் சௌத்ரி என்ற பக்தர் சனிக்கிழமை காலையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட பெரிய சேஷ வாகனம், சூரிய பிரபை மற்றும் சந்திரபிரபை வாகனம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கினார். அவற்றை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பெற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com