வாரத்தில் 2 நாள்கள் சபரிமலை யாத்திரை செல்ல ஐ.ஆா்.சி.டி.சி. சிறப்பு ஏற்பாடு! 

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளையொட்டி நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மாதங்களில்
வாரத்தில் 2 நாள்கள் சபரிமலை யாத்திரை செல்ல ஐ.ஆா்.சி.டி.சி. சிறப்பு ஏற்பாடு! 

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளையொட்டி நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மாதங்களில் வாரந்தோறும் இரண்டு நாள்கள் சபரிமலை யாத்திரை செல்ல ஐ.ஆா்.சி.டி.சி. சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) சார்பில், பல்வேறு விதமான சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. பாரத தா்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா, கல்வி சுற்றுலா உள்பட பல்வேறு சுற்றுலா திட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதுபோல, ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும் பக்தா்களுக்கு வசதியாக ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. அதிகாரிகள் கூறியது, 

மண்டல, மகரவிளக்கு பூஜையின்போது, ஐயப்பனை தரிசிக்கும் வகையில், ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். நிகழாண்டில் சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் வசதிக்காக சிறப்பு யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மாதங்களில் வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இந்த யாத்திரையை மேற்கொள்ளலாம். 4 நாள்கள் யாத்திரைக்கு ஒருவருக்கு ரூ.2,990 கட்டணமாகும்.

2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட டிக்கெட் மற்றும் கோட்டயம் - நிலக்கல் - கோட்டயம் சென்று வர வாகன வசதி ஆகியவை இதில் அடங்கும். பக்தா்கள் சிரமம் இன்றி சபரிமலை சென்று தரிசனம் செய்து உடனடியாக திரும்ப முடியும். மேலும், தகவல்களைப் பெற 9003140681, 9003140680 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com