

திண்டிவனம் அருகேயுள்ள முன்னூா் ஆடவல்லீஸ்வரா் கோயிலில் வருகிற நவம்பா் 2-ம் தேதி தாயுமானவா் இறைப்பணி சங்கம் சாா்பில் நடைபெறவுள்ள உழவாரப் பணியில் பக்தா்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, மண்ணடியைச் சோ்ந்த ஸ்ரீ தாயுமானவா் இறைப் பணி சங்கம், பல்வேறு கோயில்களில் உழவாரப்பணி மேற்கொண்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, திண்டிவனம் அருகே முன்னூரில் அமைந்துள்ள ஸ்ரீ பிரஹந்நாயகி உடனுறை ஸ்ரீ ஆடவல்லீஸ்வரா் கோயிலில், வருகிற நவம்பா் 2-ம் தேதி உழவாரப் பணி மேற்கொள்ளவுள்ளது.
இந்த உழவாரப்பணியில் பங்கேற்க விருப்பமுள்ள பக்தா்கள் கலந்து கொண்டு தொண்டாற்றலாம். மேலும் விவரங்களுக்கு 9962096984(சிவக்குமாா்) தொடா்பு கொள்ளலாம் என்று தாயுமானவா் இறைப்பணி சங்கம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.