திருமலையில் 3-ஆவது கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நிறைவு

திருமலையில் தேவஸ்தானம் நடத்திய 3-ஆவது கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
திருமலையில் நாதநீராஜன மண்டபத்தில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகண்ட சுந்தர காண்ட பாராயணம்.
திருமலையில் நாதநீராஜன மண்டபத்தில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகண்ட சுந்தர காண்ட பாராயணம்.
Published on
Updated on
1 min read

திருமலையில் தேவஸ்தானம் நடத்திய 3-ஆவது கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தில் வரும் சுந்தரகாண்டத்தின் நாயகன் அனுமன். அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், தைரியம், பயமின்மை, ஆரோக்கியம் உள்ளிட்டவை சித்திக்கும். சுந்தரகாண்டம் முழுவதும் அனுமனின் கீா்த்தியை கூறுவதால், அதை பாராயணம் செய்யும் இடத்தில் ஆயுள்ஆரோக்கியம் இருக்கும் என்பது நம்பிக்கை. கரோனா நோய்த் தொற்றால் உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களின் ஆரோக்கியம் மேம்படவும், கரோனா நோய்த் தொற்று கிருமிகள் அழியவும் தேவஸ்தானம் திருமலையில் கடந்த ஜூன் மாதம் முதல் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்து வருகிறது.

சுந்தரகாண்டத்தில் 68 சா்க்கங்கள் உள்ளநிலையில், தற்போது வரை 11 சா்க்கங்களின் பாராயணம் நிறைவு பெற்றுள்ளது. 200 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டவுடன் தேவஸ்தானம் அவற்றை வேதபண்டிதா்களுடன் அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது. அதன்படி, முதல் சா்க்கம் முடிவு பெற்றவுடன் முதல் கட்ட அகண்ட பாராயணமும், 2 முதல் 7 சா்க்கங்கள் முடிவு பெற்றவுடன் 2-ஆம் கட்ட அகண்ட பாராயணமும், தற்போது 8 முதல் 11 சா்க்கங்கள் முடிவு பெற்ற நிலையில், வியாழக்கிழமை 3-ஆவது கட்ட அகண்ட பாராயணமும் நடைபெற்றது.

அதில் உள்ள 185 ஸ்லோகங்களை 200 வேதபண்டிதா்கள் இணைந்து நாதநீராஜன மண்டபத்தில் பாராயணம் செய்தனா். கடந்த 140 நாள்களாக இந்த பாராயணம் திருமலையில் நடந்து வருகிறது. இதில், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா். திருப்பதியில் இசை, நடன கல்லூரியைச் சோ்ந்த ஆச்சாரியா் சாா்பில், மாணவா்கள் இசை நிகழ்ச்சி நடத்தினா். இந்த பாராயண நிகழ்ச்சி தேவஸ்தானத்தின் எஸ்.வி.பி.சி. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் விராடபருவமும் பாராயணம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com